பாலிவுட் ஹீரோக்களின் கனவு நாயகி - இலியானா

தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் இலியானா. தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த அவர், பின்னர் பர்பி என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆனார். படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, இலியானாவை ரசிகர்களிடம் கொண்டு சென்று விட்டது. ஆக, முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை கைப்பற்றிவிட்ட இலியானாவுக்கு அடுத்தடுத்து படம் கொடுக்க படாதிபதிகள் போட்டி போடும் நிலை உருவாகியிருக்கிறதாம்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில், தன்னை முற்றுகையிட்ட தெலுங்கு படாதிபதிகளை திருப்பி அனுப்பி விட்ட அவர், இனி முழுநேர இந்தி நடிகையாகப்போவதாகவும் அறிவித்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், இலியானாவின் நடிப்பை பாராட்டிய சில பாலிவுட் ஹீரோக்கள் அடுத்தடுத்து தங்களுடனும் டூயட் பாட வேண்டும் என்ற அன்புக்கட்டளை போட்டிருக்கிறார்களாம். இதனால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கும் இலியானா, ஒரே படத்தில் பாலிவுட் நடிகர்களின் மனங்கவர்ந்த நாயகி ஆகியிருப்பது எனக்கு அங்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதைத்தான் உணர்த்துகிறது. அதனால்தான், இந்த சமயத்தில் தென்னிந்திய படங்களில் நடித்து கவனத்தை சிதற விட்டால் இந்தியில் கிடைக்கயிருக்கும் முக்கிய இடம் பறிபோய் விடும். அதனால்தான் தெற்கில் இருந்து வரும் படவாய்ப்புகளை தவிர்த்து வருகிறேன் என்றும் கூறிவருகிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget