தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் தான் கவர்ச்சி - லட்சுமிமேனன்!


சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை படங்களில் நடிக்கிறார். இதையடுத்து மேலும் சில படங்களை கைப்பற்ற தீவிர பேச்சுவார்த்தையில் உள்ளார். இந்த நேரத்தில், சில கமர்சியல்பட இயக்குனர்களும் அவரை அணுகி வருகின்றனர். அப்படி வருபவர்களிடம் மொத்த கதையையும கேட்கும் லட்சுமிமேனன். சில காட்சிகளை தானே எடிட் செய்கிறாராம்.
எனக்கென்று ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். அதை மீறாமல் இருக்கத்தான் இந்த எடிட்டிங் என்கிறாராம்.

அப்படி என்னதான் பாலிசி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்? என்று கேட்ட ஒரு இயக்குனரிடத்தில், என்னைப்பொறுத்தவரை கவர்ச்சி என்பது தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் மாதிரிதான். அதனால் ஆடை குறைப்பு என்பது என் கொள்கைக்கு எதிரானது. அதனால் ஆடை குறைப்பு செய்யாமலேயே கவர்ச்சி காட்டுவேன். அதாவது அதிகபட்சமாக கணுக்கால் வரைதான் உடம்பை காட்டுவேன். அதற்கு மேல் செல்ல அனுமதியில்லை என்கிறாராம். அதைக்கேட்டு டென்சன் ஆகும் இயக்குனர்கள், அப்படியென்றால் நடித்து வரும் படங்களோடு நீங்கள் கேரளாவுக்கு பேக்கப் ஆகி விட வேண்டியதான் என்று ஒரேயொரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாராம் அந்த இயக்குனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்