ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சிங்கம் 2 திரைப்படத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா, அனுஷ்கா நடித்து ஹிட்டான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ‘சிங்கம்-2′ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்திலும் சூர்யா-அனுஷ்கா ஜோடி சேருகின்றனர். நகைச்சுவைக்கு முதல் படத்தில் நடித்த விவேக், அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் சந்தானம் ஜோடியாக ஒப்பந்தம்
செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் புதிதாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இயக்குனர் ஹரி கூறும் போது, விவேக்கும், சந்தானமும் முன்னணி காமெடியர்களாக உள்ளனர். இருவரும் சிங்கம்-2 படத்தில் நடிக்கிறார்கள். இப்போது லட்டு புகழ் ஸ்ரீனிவாசனையும் சேர்க்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் விவேக் ஏட்டு ஏழுமலை என்ற கேரக்டரில் நடித்து இருந்தார். ‘சிங்கம்-2′ விலும் அதே வேடத்தில் நடிக்கிறார். சந்தானம் மற்றும் பவர் ஸ்டார் காமெடிகளுக்காக ஸ்பெஷல் டிஸ்கஷன் நடப்பதால் படத்தில் இன்னொரு சிறப்பான அம்சமாக இருக்கும் என்றார். சிங்கம் 2ல் மூன்று காமெடியர்கள் நடிப்பதால் காமெடி காட்சிகள் களை கட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. மூவருக்கும் தனித் தனியாக காமெடி சீன்கள் உருவாக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் ஹரி கூறினார். லட்டு தின்ன ஆசையா? பட ரிலீசுக்குப் பின்னர் பவர் ஸ்டாருக்கு ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதால் ஏராளமான இயக்குநர்கள் அவரை புக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது.