
ஒரு விறுவிறுப்பான sci-fi (விஞ்ஞான கற்பனை) திரைப்படம். எதிர்காலத்தில் மிகவும் தொலவிற்குச் சென்று விடாமால் 2009 ஆண்டு நடப்பதாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள் (சும்மா ஒரு ‘இது’க்குத்தான்! முன்பின் சம்பந்தமில்லாத கதாநாயகனுக்கும் நாயகிக்கும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றது. என்னவென்று கேட்டால், கேள்வி ஏதும் கேட்காமல் அதைச்செய் இதைச்செய் என்று ஒரு பெண்குரல் ஆணையிடுகின்றது.
ஆணையிடுவது மட்டுமல்லாது இவர்கள் எந்த மூலையில் சென்று ஒழிந்தாலும் அதை அறிந்துவிடுகிறாள் அந்த தொலைபேசிப் பெண். (யாருக்கும் Matrix படம் ஞாபகம் வருகின்றதோ?) இவர்களது உயிர் அந்த தொலைபேசிப் பெண்ணின் ஆணைகளை நிறைவேற்றுவதில் தங்கியிருக்க, அவற்றை நிறைவேற்றுகின்ற அதே நேரம், அநத வலையிலிருந்து தப்பவும் முயற்சிக்க வேண்டிய தேவை. இந்தளவுக்கும் கதை நன்றாக இருந்தாலும், படத்தில் கடைசி அரைப்பகுதியில் iRobot படத்தை ஞாபகப் படுத்தி அலுப்படித்து விடுகின்றார்கள்.
ஆகா ஓகோ என்கின்ற மாதிரியான படமில்லை என்றாலும் வழைமையான விறுவிறுப்புகளோடு இருக்கின்றது. நடிப்பென்று சொல்லிக்கொள்ள படத்தில் எதுவுமில்லை என்றாலும், Shia LaBeouf தனது ரசிகர்களை திருப்திப் படுத்தியுள்ளார்.