சினிமாவில் நடிக்க ஆசை படும் கவர்ச்சி புயல் ஜூவாலா கட்டா


பிரபல இந்திய பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா. பாட்மின்டன் விளையாடும்போதும் சரி. பொது நிகழ்ச்சிகளில் கலந்த கொள்ளும்போதும் சரி தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிப்பவர். 29 வயதான ஜூவாலாக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இருக்கிறது. சென்னையில் ஒரு பாட்மின்டன் விளையாட்டு உபகரணங்கள் விற்கும் கடையை திறக்க வந்திருந்த அவர் அங்கு நிருபர்களிடம் பேசும்போது தனது விளையாட்டு பற்றி பேட்டியளித்தார். 
அப்போது ஒரு நிருபர் "அழகாக இருக்கிறீர்களே ஏன் சினிமாவில் நடிக்க கூடாது?" என்று கேட்டார். இதற்கு பதிலளித்து ஜூவாலா கூறியதாவது: விளையாட வந்த அழைப்பை விட சினிமாவில் நடிக்க கேட்டு வந்த அழைப்புதான் அதிகம். விளையாட்டில் பிசியாக இருந்ததால் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை. விளையாட்டு வீராங்கனைகள் சினிமாவில் நடிப்பது ஒன்றும் தவறில்லையே. அதனால் 2016 ஒலிம்பிக் வரை விளையாடிவிட்டு அதன் பிறகு விளையாட்டிலிருந்து விலக இருக்கிறேன். அதன் பிறகு நல்ல கதையும், நல்ல கம்பெனியும் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். என்றார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget