My Sassy Girl சினிமா விமர்சனம்


இயக்கம் : Kwak Jae-yong
நடிப்பு: Jun Ji-hyun, Cha Tae-hyun
மொழி : கொரியன்,
ஆண்டு : 2001

ஒரு பயந்தாங்கொள்ளி நாயகனுக்கும், அடிதடி நாயகிக்கும் இடையிலான காதல் கலாட்டாதான் My Sassy girl.

படத்தின் கதை, நாயகியின் ஒற்றை வசனத்தில் அடங்கியிருக்கிறது… ” I met the man from the future”. ஒரு மாதிரி sci-fi மாதிரி தெரியுதா..? ஆனா, அது இல்லை.

தன் முதல் காதலனின் மறைவுக்குப் பிறகு ஒரு எக்கச்சக்கமாக தண்ணியடிச்சுட்டு(!) தற்கொலைக்கு முயலும் நிலையில் இருக்கும் நாயகியைக் காப்பாற்றுகிறார் நாயகன். அதன் பின் மீண்டும் மீண்டும் அவர்கள் சந்திக்கும் தருணங்கள் தானாய் வந்து வாய்க்க நாயகனுக்குள் காதல் பூக்கிறது. அதன் பின் திரைக்கதையின் போக்கில் நகர்கிறது இப்படம்.

மொத்தத்தில் மூன்று பாகங்களாக வருகிறது இப்படம். முதல் பாகம், இருவரும் சந்தித்ப்பதில் தொடங்கி காதல் பூப்பது வரை. இரண்டாம் பாகம், Time capsuleஐ புதைத்து இருவரும் பிரிவது வரையில், மூன்றாம் பாகம், மீண்டும் இருவரும் இணைய சுபம். 

Time Capsule – அதாவது, இருவரும் பிரியறதுன்னு முடிவுசெய்த பிறகு, கடைசியாக ஒரு முறை சந்திக்கத் திட்டமிடுகின்றனர். அதற்கு முந்தைய நாள் இரவு ஒருவரைப் பற்றி மற்றொருவர் என்னென்னவெல்லாம் நினைக்கிறாரோ அதனை ஒரு கடிதத்தில் எழுதி எடுத்து வரவேண்டும். அடுத்த நாள் இருவரும் சேர்ந்து ஒரு முட்டை வடிவிலான பெட்டியில் இருகடிதங்களையும் வைத்து, ஒரு சிறு குன்றின் உச்சியிலுள்ள ஒரு மரத்தினடியில் புதைக்கின்றனர். சரியாக, இரண்டு வருடம் கழித்து அதே நாளில் இருவரும் அவ்விடத்திற்கு திரும்பி வந்து இருவரது கடிதத்தையும் படிப்பதாக ஒரு முடிவு.

இரண்டு வருடங்களுக்குப் பிறது இருவரும் அந்த இடத்துக்கு வந்தாங்களா? எப்படி சேர்ந்தார்கள் என்று சொல்கிறது படத்தின் பிற்பகுதி..

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அந்த ஹீரோயின்தான்.. முன்னாடி நமக்கு forward ல் வரும் சில படங்கள் ஞாபகம் இருக்கா? Japanese painting மாதிரி இருக்கும். ஒரு பெண் புத்தகம் படிப்பது மாதிரி அப்பும் இன்னும் சில.. கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ஹீரோயின்.. எனக்கு ஆறு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியல.. 

அடுத்து அந்த இரண்டாம் பாகத்தின் முடிவுக் காட்சி.. அப்பப்போ நாயகிக்கு திடீர்னு ஒரு ஆசை வரும் அதனை நாயகன் நிறைவேற்றியே ஆக வேண்டும்.. படத்தின் முற்பகுதிகளில் இது மாதிரி ஆசைகளை நிறைவேற்றுகையில் நமக்கு சிரிப்பு வந்தாலும், கடைசி காட்சியில் ரொம்பவே feel பண்ண வைச்சிடுது..

ஒரு மாதிரி feel good movie.. படத்தில் வரும் பழக்கவழக்கங்கள், சமூக அமைப்பெல்லாம் ரொம்ப புதுசா இருந்தது எனக்கு..
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget