கற்பழிக்கப்பட்ட டெல்லி மாணவியாக நடிக்க தயார் என்று தமிழ் நடிகைகள் லட்சுமிராய், பியா ஆகியோர் கூறியுள்ளனர். டெல்லியில், ஓடும் பஸ்சில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் சேர்ந்து கற்பழித்தார்கள். அதை தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை கடுமையாக தாக்கினார்கள். பின்னர் இரண்டு பேரையும் பஸ்சில் இருந்து தூக்கி வீசினார்கள். பலத்த காயம் அடைந்த மருத்துவ மாணவி, கவலைக்கிடமான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, பின் மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை படமாக்கும் முயற்சியில் பாலிவுட் மற்றும் கோலிவுட் இயக்குநர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து நடிகை லட்சுமி ராய் கூறுகையில், "பரபரப்பான இந்த சம்பவத்தை படமாக்கினால், அதில் டெல்லி மாணவியாக நடிக்க தயார். இப்படி ஒரு படம் தயாரானால், அது சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அதற்காகவே, அந்த மாணவியாக நான் நடிக்க தயாராக இருக்கிறேன்'' என்றார். நடிகை பியா கூறுகையில், "இந்த வேடத்தில் நடிக்க நான் தயார். சம்பளம் பற்றிக்கூட கவலையில்லை. இந்த வேடத்தில் நடித்தால் ஒரே நாளில் இந்தியா முழுக்க பிரபலமாகிடுவேன்," என்றார்.