காதலர்களின் பெற்றோரை கனிய வைக்க எளிய வழிகள்


இளைய தலைமுறையினருக்கு காதல் வந்துவிட்டால் அவர்கள் மற்றவர்களை பற்றி கவலை கொள்வதே இல்லை. தன் வீட்டில் என்ன நடக்கிறது, பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என எதை பற்றியும் சிந்திக்க இன்றைய அவசரக்கார காதலர்களுக்கு நேரம் இல்லை.  கண்டவுடன் காதல், பேஸ் புக்கில் காதல், இன்டர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல் என இன்றைக்கு காதல் பல பரிமாணங்களை கொண்டுள்ளது. துளிர்த்த காதல் கசிந்து போவதற்கு முன் திருமணம் செய்துவிட வேண்டும்
என்ற எண்ணம் இன்று பெரும்பான்மையான ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கிறது.

ஆண், பெண் இருவரும் பொருளாதாரத்தில் பெற்றோரை சாராமல் இருந்துவிட்டால் அவர்களின் சம்மதத்தை கூட கேட்காமல் அவசரமாக நான்கு நண்பர்கள் முன்னிலையில் ஆயிரம் காலத்து பயிரினை நடத்து வங்குகிறார்கள்.

உங்கள் காதல் உண்மையாக இருந்து இல்லற வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் பிரச்சனை இல்லை.அதுவே வயதால் ஏற்படும் சலனத்தால் காதலித்து அது திருமணத்தில் முடிந்து இல்லற வாழ்வில் பிரச்சனை வரும்போதுதான் பெற்றோரின் நினைவு வரும்.

காலம் கடந்த பிறகு இதையெல்லாம் யோசித்து சங்கடபடுவதை விட காதலிக்கும்போதே அதை பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வது நல்லது.உங்கள் காதல் நிலைப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் அதை பெற்றோர்கள் சுலபமாக கண்டுபிடித்து விடுவர்.

இவை எல்லாவற்றையும் விட இருவீட்டாரின் சம்மதத்துடனும் ஆசீர்வாதத்துடனும் நடக்கும் திருமணம் நீடித்து நிலைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்க சில முறைகளை கையாளலாம். அவற்றில் சில,

1. பெற்றோருக்கு சிறிது நேரம் கொடுங்கள்.
2. அவர்கள் உங்கள் காதலரை வெறுக்கும் காரணத்தை கண்டறியுங்கள்.
3. உங்கள் காதலரிடம் இதைபற்றி பேசாதீர்கள்.
4. உங்கள் குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுங்கள்.
5. அவர்களின் இடத்திலிருந்து யோசியுங்கள்.
6. உங்கள் விருப்பத்தையும், உணர்வுகளையும் பெற்றோருக்கு புரியவைக்க முயலுங்கள்.
7. பெற்றோரை வெறுத்துவிடாதீர்கள்.
8. பொறுமையாக இருந்து உங்கள் காதலை நிரூபியுங்கள்.
9. அவர்களின் விருப்பபடி உங்கள் காதலரின் நடவடிக்கைகளை மாற்றமுடியுமா என்று பாருங்கள்.
10. உங்களது பெற்றோர் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

சில நேரங்களில் இவை அனைத்தும் உபயோகப்படாமல் போகலாம். பெற்றோர்கள் வறட்டு கெளரவம், அந்தஸ்து போன்ற காரணங்களுக்காக உங்கள் காதலை எதிர்க்கும்போது, உங்கள் காதலின் மீது கலைக்கமுடியாத நம்பிக்கை இருந்தால் நன்கு சிந்தித்து உங்களின் வாழ்வை தேர்தெடுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget