
சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் என்று பவர் ஸ்டார் சொன்னது சும்மாயில்லை. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்தைவிட இவருக்குதான் கரகோஷம் அதிகம். ஷங்கரின் ஐ படத்தில் வேறு நடித்து வருகிறார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் காம்பினேஷனைப் பார்த்து மிர்ச்சி சிவா நடிக்கும் யா யா படத்தில் பவர் ஸ்டாரை
ஒப்பந்தம் செய்துள்ளனர். ரொமான்டிக் காமெடியாக உருவாகும் யா யா வில் ஏற்கனவே சந்தானம் இருக்கிறார். இப்போது பவர் ஸ்டாரை அவருடன் கோர்த்துவிட்டு படத்தின் வெற்றிக்கான சதவீதத்தை அதிகரித்துள்ளனர்.
ராஜசேகரன் இந்தப் படத்தை இயக்க வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இசை விஜய் எபினேசர். சிவா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
சிவா நடித்து வரும் யாருக்கு தெரியும் படத்துக்குப் பிறகு இந்த யா யா வெளியாகவிருக்கிறது.