Quantum of Solace சினிமா விமர்சனம்


Casino Royal கதை முடிந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5 நிமிடம் கழித்து இந்தப் படத்தின் கதை தொடர்கிறது. எடுத்தவுடன் காரில் துரத்தலென்று ஆரம்பிக்கின்றார்கள். Vesperஐ இழந்து கொலைவெறியில் இருக்கும் James Bondஐ தத்ரூபமாக வெளிக்கொண்டுவந்து இருக்கின்றார் Daniel Craig. தனது புலனாய்வின் பாதையில் வரும் எதையும், எவரையும் கரிசனை எதுவுமின்றி தூக்கிப் போட்டுக்கொன்று செல்கிறார். Casino Royalஇன் கதையிலிருந்து இது
தொடர்வதாக இருந்தாலும், Vesper சம்பந்தப்பட்ட பாகத்தைத் தவிர பெரிதாக ஒரு தொடர்ச்சியும் இல்லை. உலகின் பல்வேறு உளவு நிறுவனங்களும் ஒரு நிறுவனத்தினால் ஊடுருவப் பட்டிருக்கின்றது என்பதை Casino Royalன் கடைசியில் அறியவரும் James Bond, அந்த நிறுவனத்தின் வேர் எங்குவரை செல்கின்றது என்பதை அறிய முயல்வதுதான் கதை.

படத்தில் விறுவிறுப்புக்கு குறைவில்லை — கார் துரத்தல்கள், விமான திரத்தல்கள், நேருக்கு நேர் அடிபாடுகள் என்று எல்லாம் உண்டு (அந்த $100,000 Aston Martin காரை சின்னாபின்னமாக துவைத்து எடுப்பதைப் பார்க்க இரத்தக் கண்ணீர் வருகின்றது!) சாகசக் காட்சிகளை Bourne படவரிசைகளிற்கு பொறுப்பான சாகச இயக்குணர் பொறுப்பெடுத்திருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது! விறுவிறுப்புத் தவிர நவீன தொழில் நுட்பம், கவர்ச்சிகரமான பெண்கள், Bondஇன் எள்ளிநகையாடும் கதைகள் என்று James Bond படத்திற்கான சகல் முத்திரைகளும் உண்டு. என்றாலும் கதாபாதிரங்களை எண்ணுகையில் இது Casino Royal அளவிற்கு சிறப்பாக இல்லை. Daniel Craig சிறப்பாகச் செய்திருக்கின்றார். என்றாலும் முதன்மை பெண் பாத்திரம் (by Olga Kurylenko) முன்னைய படத்தைப்போல கனமாதாக இல்லை. வில்லன் பாத்திரமும் கூடத்தான். எனவே முழுப்படத்தின் கனமும் James Bondஇனதும் Mஇனதும் பாத்திரங்களில் கையில் சேர்ந்துவிட அது ஒரு சீராகத் தெரியவில்லை.

James Bond ரசிகர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். என்றாலும் Batman Beginsற்கு ஒரு Dark Knight போல, Casino Royalற்கு ஒரு Quantum of Solace என்று நிச்சயமாக கூறமுடையாது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget