காம்டோ அளவிற்கு நுண்ணியமாக வரிகளைக் கண்டறியாவிட்டாலும், ட்வீக் நவ் ரெக் கிளீனர், மிக வேகமாக ரெஜிஸ்ட்ரியைச் சுத்தப்படுத்தும் எனப் பெயர் பெற்றதாகும். வேகம் ஒன்று மட்டும் உங்கள் விருப்பம் எனில், இந்த ரெஜிஸ்ட்ரி கிளீனரைப் பயன் படுத்தலாம். விண்டோஸ் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தற்காலிக பைல்கள், இணைய உலாவில் உருவாக்கப்படும் பைல்கள், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் டேட்டா பைல்கள் என அனைத்தையும் சுத்தப் படுத்துவதுடன்,
விண்டோஸ் செட்டிங்ஸ் அமைப்பையும் சரி செய்கிறது. அத்துடன் நெட்வொர்க் செட்டிங்ஸ் சரியாக இல்லை எனில் அதனையும் சரி செய்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:6.79MB |