Valkyrie – சினிமா விமர்சனம்


இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய பங்கு என்ன என்று நான் சொல்லத் தேவையில்லை. ஹிட்லர் உலகையே ஆள நினைத்த நேரம், அவரது ராணுவத்தில் இருந்த சில உயர் அதிகாரிகள் அவரை கொன்றுவிட்டு ஆட்சியை பிடிக்க செய்யும் ஒரு முயற்சிதான் valkyrie (வால்க்ரி). நடந்த ஒரு உண்மைச்சம்பவம், ஒரு பெயர் கூட மாற்றமில்லாமல் அப்படியே படமாக வந்திருக்கிறது. இது போல் இராணுவம் ஆட்சியை பிடிக்க முயல்வதை coup attempt என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். பாகிஸ்தானில்
முஷரப் ஆட்சியை பிடித்தது இந்த வகைதான்.ஹிட்லருக்கு மிக நெருக்கமாக இருக்கும் அதிகாரிகளில் ஒரு பத்து பதினைந்து பேர் சேர்ந்து 1944 july 20 அன்று அவரை கொல்ல செய்யும் முயற்சிதான் படம். ராணுவக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கும் Colonel Stauffenberg கேரக்டரில் நடித்திருக்கிறார் Tom Cruise. உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயம், திடீரென ஜெர்மனி நகரங்களின் மேல் குண்டு விழுந்து சேதம் ஏற்ப்பட்டால், அதை சமாளிக்கும் பொருட்டு கொண்டுவந்த சட்டம் தான் ‘Valkyrie’ அல்லது operation Valkyrie.
பதவிக்காக நடக்கும் மற்ற ராணுவப் புரட்சி போல் இல்லாமல், ஒரு சர்வாதிகாரியின் பிடியில் இருந்து நாட்டை மற்றும் ராணுவ வீரர்களை காப்பாற்றும் பொருட்டு நடந்த ஒரு ராணுவப் புரட்சி இது. ஜெர்மனியின் மீது திடீர் குண்டு மழை பொழிந்தால், நிலைமையை சமாளிக்க உதவும் சட்டமான Valkyrieயில் சில மாற்றங்களை கொண்டுவருவார் Staffenburg. இந்த சட்டத்தின் படி திடீர் தாக்குதலில் ஹிட்லர் உயிர் இழந்தால், நாட்டின் மொத்த கட்டுப்பாட்டையும் ஜெர்மனியின் reserve army தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும். ஹிட்லர் செத்தால் கூட அவருடைய கையெழுத்து இல்லாமல் நாட்டில் எதுவும் நடக்காது என்று தெரிந்தது, அவரிடமே அந்த சட்டத்தில் கையெழுத்து வாங்கி ஒப்புதலும் பெற்றுவிடுகிறார் Stauffenberg.

பாகிஸ்தான் போன்ற ஜனநாயக நாட்டில் ஏற்ப்படும் ராணுவக் கிளர்ச்சிக்கும், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கீழ் உள்ள நாட்டில் நடக்கும் ராணுவப் புரட்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஜனநாயக நாட்டில் இது போன்ற திட்டம் தோல்வி அடைந்தால், நாட்டை விட்டு வெளியேற்றப்படும் வாய்ப்பு உண்டு, ஆனால் சர்வாதிகார நாட்டில் மரணம்தான். அதுவும் உடனே.

ஒரு leather suitcaseல் pencil detanatorஐ எடுத்துக் கொண்டு Wolf’s Lairக்கு செல்வார் Stauffenberg. Wolf’s lair – இது தான் ஹிட்லருடைய ராணுவத் தலைமையகம், முக்கிய கூட்டங்கள், முடிவுகள் எல்லாம் இங்கேதான் எடுக்கப்படும். Bunker என்று சொல்லப்படும் பதுங்குக் குழிக்குள் தான் கூட்டம் நடைபெறும். Wolf’s Lairக்குள் Staffenburg செல்லும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும் விதம் பரபரப்பின் உச்சம். Pencil detonator முனையை கத்தியால் வெட்டிவிட்டு அதை leather suitecaseல் வைத்துக்கொண்டு அந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் Stauffenberg. அது வெடிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்பாக suitecaseஐ அங்கேயே வைத்து விட்டு தான் மட்டும் தன் சகா Haeftenனுடன் வெளியேறிவிடுவார். எதிர் பார்த்தது போல் குண்டு வெடிக்கும். சிறிது நேரம் தாமதித்தாலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதை உணர்ந்து Valkyriஐ அமுல்படுத்த உத்தரவிடுவார் Staffenburg. முதலில் தயக்கம் காட்டினாலும் பின்னர் வேறு வழியின்றி Olbricht, operation Valkyreஐ அமுல்படுத்துவார்.

பொதுவாக ராணுவக் கிளர்ச்சி ஏற்படும்போது என்னென்ன அரங்கேறுமோ அவ்வளவும் நடக்கும். அரசுக்கு விசுவாசமான அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள். ரேடியோ, நாளிதழ் போன்ற ஊடகங்களை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும். எல்லாம் Stauffenberg நினைத்த மாதிரி போய்க்கொண்டிருக்கும் . இந்த நேரத்தில் இன்னொரு அதிகாரியான General Friedrich Fromm, Wolf’s lairஐ தொடர்பு கொண்டு விசாரிப்பார், எதிர் முனையில் “Fuhrer is fine. Another failure attempt” என்று பதில் வரும். அத்தோடு இன்னும் சிறிது நேரத்தில் ரேடியோவில் ஹிட்லர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு வரும். கண்முன் நடந்த குண்டுவெடிப்பு எப்படி பொய்யாகும் என்ற குழப்பத்தில் Staffenburg இருக்கும் போது, கிளர்ச்சியாளர்களை பிடிக்க General Fromm மறைமுகமாக உத்தரவிடுவார். அனைவரும் கைது செய்யப்பட்டு துப்பாக்கி முனையில் நிற்க வைத்து சுட்டுக் கொள்ளப்படுவார்கள். இத்துடன் படம் முடியும். அதன் பிறகு, ஹிட்லர் 8 மாதங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், Staffenburgயுடைய மனைவி 2002ல் இறந்ததாகவும் screenனில் போடுகிறார்கள்.

நடந்து முடிந்த வரலாரை படமாக எடுக்கும்போது எந்த பகுதி வேண்டும் என்பதைவிட எந்தப் பகுதி வேண்டாம் என்பதில் மிகத் தெளிவாக இருக்கவேண்டும். ஒரு சிறு காட்சி கூட கதையின் மொத்த சுவாரஸ்யத்தை குறைத்துவிட வாய்ப்புண்டு. இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் பார்வையாளர்களுக்கு முன்பே தெரியும், அப்படி கதை தெரிந்தவர்களைக் கூட ஒரு நிமிடம் அசையவிடாமல் படம் பார்க்க வைப்பது ரொம்ப கடினம். இது போன்ற அனைத்து விஷயங்களையும் மனதில்கொண்டு அற்புதமாக இயக்கியிருக்கிறார் Bryan Singer. அருமையான படம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget