In Bruges ஹாலிவுட் சினிமா விமர்சனம்


மிக மிக வித்தியாசமான படம். அது ஏனென்று விபரிப்பது மிகவும் கடினம். படத்தைப் பார்த்துத்தான் நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். காசிற்காக கொலைசெய்வது Rayஇன் (Colin Farrell) வேலை. ஒரு கொலை நிகழ்வின்போது தற்செயலாக ஒரு சிறுவனையும் சேர்த்து கொலை செய்து விடுகின்றான் Ray. உடனடியாக இவனையும் இவனது கூட்டாளியான Kenஐயும் (Brendan Gleeson) பெல்ஜியம் நாட்டிலிருக்கும்
புறூஜ் (Bruges) என்னுமிடத்திற்கு அனுப்பி வைக்கின்றார் இவர்களது தலைவர் Harry (Ralph Fiennes). புறூஜின் அழகை ரசிக்கும் Ken, தான் செய்த தவறினை எண்ணி எண்ணி விரக்தியடைந்துபோகும் Ray – இப்படியாக இவர்கள் தமது நாட்களை கழித்துக்கொண்டிருக்கும்போது Rayஐக் கொல்லச்சொல்லி Harryயிடமிருந்து ஆணை வருகின்றது Kenற்கு. இந்த முக்கோண விளையாட்டை விபரிக்கின்றது படம்.

குற்றவுணர்வு, நட்பு, விசுவாசம், நன்றிக்கடன், கொள்கையை நிலைநாட்டல் என்று பல sentiment படத்திலுண்டு. எண்ணிப்பார்த்தால் சமிபகால தமிழ்ச் சினிமாவில் வரும் கதை போலக்கூடத் தோன்றும். ஆனால் படத்தை எடுத்த விதத்தில் மிகவும் வித்தியாசம் காட்டியிருக்கின்றார்கள். ஒரு seriousஆன கதையோட்டத்தோடு, படத்தில் கடி ஜோக்குகளை அள்ளி விதைத்திருக்கின்றார்கள். கடைசிக்கட்ட திரத்தல் காட்சியைத் தவிர படத்தில் முழுக்க கதைவசனம்தான். எனவே விறுவிறுப்பான படம் என்று கூறமுடியாது, ஆனால் கவனத்தை சிதறவிடாது கதை போகின்றது. ஆக்ஸன் படம், மர்மப் படம் என்று இதைப் பார்க்க முடியாது. ஆனால் சாதாரண வரையரைக்குள் நிற்காத வித்தியாசிமான படங்களை நீங்கள் ரசிப்பவரானால் இதை மிகவும் ரசிப்பீர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget