கரீனா பப்ளிமாஸ் - உடலை குறைக்க கடும் பயிற்சி

சயீப் அலிகானுடனான, திருமண வாழ்வை சந்தோஷமாக கழித்து வரும், கரீனா கபூர், அடுத்ததாக, இயக்குனர் கரண் ஜோகரின், படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில், இவருக்கு மட்டும், ஐந்து பாடல்கள். ஐந்துமே, அதிவேக இசையுடன் கூடியவை. நடனத்துக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த பாடல்கள், படமாக்கப்படவுள்ளன. ஆனால், சமீபகாலமாக, கரீனாவின் உடல்வாகு, சற்று குண்டடித்து காணப்படுவதால்,
அவரால், சிறப்பாக நடனமாட முடியுமா என்ற சந்தேகம், இயக்குனருக்கு ஏற்பட்டது. இதை, தயங்கி, தயங்கி, கரீனா கபூரிடம் அவர் கூற,"இதற்கு ஏன், இவ்வளவு தயங்குகிறீர்கள் என, கூறிவிட்டு, அடுத்த நாளே, ஜிம்மில் ஐக்கியமாகி விட்டார்."படப் பிடிப்பு துவங்குவதற்குள், உடல் எடையை, கணிசமாக குறைத்து விடுவேன் என, சபதம் செய்யாத குறையாக, வியர்க்க, விறு விறுக்க, ஜிம்மிலேயே, தவமிருக்கிறார், கரீனா.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget