ஹாலிவுட்டில் மெகா ஹிட்டான விஸ்வரூபம் - ஐங்கரன்


இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதாக அப்படத்தை அந்த நாடுகளில் விநியோகம் செய்துள்ள ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விஸ்வரூபம் மட்டுமே உலக அளவில் தற்போது பெருமளவில் பேசப்பட்டு வரும் ஒரே தமிழ்ப் படமாகும். இங்கிலாந்து மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை
இப்படம் திரையிடப்பட்டது. தற்போது 2வது வாரமாக அரங்கு நிறைந்த காட்சிகளுடன் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய அளவில் இப்படத்துக்கு அங்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் மட்டும் இப்படம் மொத்தம் 30 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. பல தியேட்டர்களில் தினசரி 9 காட்சிகள் வரை திரையிடுகின்றனர். காரணம், ரசிகர்களின் கூட்டம் மற்றும் கோரிக்கை காரணமாக. கமல்ஹாசன் படம் ஒன்று இங்கிலாந்தில் இந்த அளவுக்கு பிரமாண்ட வரவேற்பைப் பெற்றிருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிச் செய்தியாகும். ரசிகர்களின் கோரிக்கை காரணமாக இந்த வாரம் கூடுதலாக 8 திரைகள் விஸ்வரூபத்தை திரையிடவுள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும், இங்கிலாந்திலும் விஸ்வரூபம் சூப்பர் ஹிட் படமாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என்று ஐங்கரன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget