விஸ்வரூபத்துக்கு தமிழகம் தடை விதித்ததால் எழுந்த பீதி இந்தி விஸ்வரூப்பின் முதல்நாள் கலெக்சனில் எதிரொலித்தது. கலவரம் வெடிக்கிறதுக்கான கச்சா பொருள் படத்தில் இல்லை என்பது முதல் நாளிலேயே தெரிய வந்ததால் இரண்டாம் நாளிலிருந்து கூட்டம் அலைமோதியது. முதல்வார இறுதியில் இந்தி டேவிட் படத்தை முந்தி 11.5 கோடிகளை வசூலித்துள்ளது விஸ்வரூபத்தின் இந்திப் பதிப்பான விஸ்வரூப். ஒரு வாரத்துக்குப் பிறகும் கலெக்சன்
நல்லபடியாக இருப்பதால் இந்த வசூல் அடுத்த வாரத்தில் மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்பது வடக்கின் கணிப்பு.
வெள்ளிக்கிழமை அக்சய் குமாரின் ஸ்பெஷல் 26, பிரபுதேவாவின் ஏபிசிடி படங்கள் வெளியாயின. இதில் ஸ்பெஷல் 26 சீரியஸான படம் என்பதால் படம் நன்றாக இருந்தும் தியேட்டர்களில் கூட்டம் இல்லை. ஏபிசிடி மொக்கையாக இருந்தும் கூட்டம் அம்முகிறது. இரண்டே நாளில் இதுவும் ஆஃபாகிவிடும். ஆக, விஸ்வரூபத்துக்கு இன்னும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
தமிழகத்தில் படம் வெளியாகும் முன்பே விஸ்வரூபத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி பதிப்புகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 100 கோடியைத் தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.