கோடை கால சரும அரிப்புகளை தடுப்பதற்கு புதிய டிப்ஸ்


குளிர்காலத்தில் மட்டும் தான் சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படும் என்று நினைக்க வேண்டாம். குளிர்காலத்தை விட, கோடைக்காலத்தில் தான் அதிகப்படியான சருமப் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் இன்றைய காலத்தில் யாரும் வீட்டிலேயே உட்கார்ந்து வேலை செய்வதில்லை. பலருக்கு வீட்டை விட, வெளியே தான் அதிக வேலை இருக்கும். கோடைக்காலம் ஆரம்பிக்க போகிறது.
இதுவரை வேலையில் ஏற்படும் பிரச்சனையையே சரிசெய்ய முடியவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சருமத்தில் வேறு பிரச்சனைகள் ஏற்படப் போகின்றன. அதில் ஒன்று தான் சருமத்தில் அதிகப்படியான வெப்பம் படுவதால் ஏற்படும் அரிப்புக்கள்.

பொதுவாக இத்தகைய அரிப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான வியர்வை வெளிப்படுவது மற்றும் உடல் வெப்பம் தான். இதனால் சருமத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகளாக ஆங்காங்கு காணப்பட்டு, அதன் மேல் அரிப்புக்கள் உண்டாகி, எரிச்சல் உண்டாவது என்றெல்லாம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை உடலின் கழுத்து, முகம், கைகள், முதுகு, மடிப்புக்கள் உள்ள இடங்கள் போன்றவற்றில் ஏற்படும். குறிப்பாக இதனால் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே இத்தகைய பிரச்சனையை தவிர்க்க ஒருசில இயற்கை முறைகள் மற்றும் செயல்கள் இருக்கின்றன, அத்தகையவற்றை சரியாக பின்பற்றி வந்தால், நிச்சயம் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். சரி, அது என்னவென்று பார்ப்போமா!!!

கற்றாழையின் ஜெல்லை தினமும் மூன்று முறை அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால், அரிப்புக்கள் ஏற்பட்ட இடத்தில் உண்டான காயமானது குளிர்ந்து, விரைவில் குணமாகிவிடும்.

கடலை மாவை நீரில் கலந்து, அரிப்புக்கள் உள்ள இடத்தில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கோடைக்காலத்தில் ஏற்படும் அரிப்புகளானது போய்விடும்.

சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் அரிப்புகளை நீக்க, அந்த இடங்களில் ஐஸ் கட்டிகளை மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை வைத்து மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அரிப்புக்களானது பரவாமல் இருப்பதோடு, எளிதில் நீங்கும்.

வெள்ளரிக்காய் சருமத்தை குளிர்ச்சி அடையச் செய்வதில் மிகவும் சிறந்தது. எனவே சருமத்தில் எரிச்சலையூட்டும் அரிப்புக்களை நீக்க, வெள்ளரிக்காயின் துண்டுகளை தேய்த்து வர குணமாகும்.

சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட்டால், அப்போது நிச்சயம் ஃபேஸ் க்ரீம்கள் மற்றும் இதர மருந்துகளைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

சீமைச்சாமந்தி டீயை அரிப்புகள் உள்ள இடத்தில் தடவினால், சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கும் கிருமிகள் அழிந்து, அரிப்புக்கள் நீங்கிவிடும்.

சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்குவதற்கு, குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, குளித்தால், சருமம் மென்மையடைந்து, அரிப்புக்களும் நீங்கும்.

குளித்தப் பின்பு, சருமத்தில் உள்ள ஈரம் காயும் வரை காத்திருக்காமல், உடனே சருமத்தில் பாடி லோசன்களை தடவுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அதுவே சருமத்தில் அரிப்புக்களை உண்டாக்கும்.

உடுத்தும் ஆடைகள் எப்போதும் லூசாக இருக்க வேண்டும். இல்லையெனில் சருமத்துளைகளால் சரியாக சுவாசிக்க முடியாமல், பின் அதிகப்படியான வியர்வை ஏற்பட்டு, அரிப்புகள் உண்டாகும்.

சோளமாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, காய வைத்து, பின் ஈரமான துணியால் துடைத்து வர, அரிப்புகள் நீங்கும்.

தினமும் நான்கு முறை எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களில் இருந்து விடுபடலாம்.

தர்பூசணியை அரைத்து, அதனை உடலில் அரிப்புக்கள் ஏற்படும் இடங்களில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சருமம் குளிர்ச்சி அடைந்து, அரிப்புக்கள் நீங்கும்.

தினமும் குளித்த பின்பு, உடலுக்கு டால்கம் பவுடரை போட வேண்டும். அதிலும் 3-4 முறை தினமும் போட்டால், சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் தடுக்கும். குறிப்பாக கோடைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான வியர்வையினால், சருமமானது அதிக எண்ணெய் பசையுடன் இருக்கும். எனவே டால்கம் பவுடரைப் போட்டால், இத்தகைய பிரச்சனையையும் தடுக்கலாம்.

வைட்டமின் சி அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களை தவிர்க்கலாம்.

சருமத்தை குளிர்ச்சியடையச் செய்வதில் தேன் சிறந்த பொருள். எனவே சருமத்தில் வெப்பத்தினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்களை நீக்குவதற்கு தேனை தடவி, ஊற வைத்து கழுவினால், சிறந்த பலனைப் பெறலாம்.

புதினாவால் செய்யப்படும் டீ உடல் வெப்பத்தை குறைத்து, சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்குவதில் சிறந்தது. எனவே இந்த டீயை சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், அரிப்புக்களை நீக்க முடியும்.

தக்காளியிலும் சருமத்தை குளிர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ளும் பொருள் அதிகம் உள்ளது. எனவே சருமத்தில் வெப்பத்தினால் ஏற்படும் அரிப்புக்களை நீக்குவதற்கு, தக்காளியை அரைத்து, சருமத்தில் தடவி, ஊற வைத்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் அரிப்புக்களை நீக்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget