தாய்மை என்பது அழகான ஒரு நிலை. பெண் தன் மொத்த வாழ்க்கைக் காலத்திலும் அழகாக இருப்பது இந்தத் தாய்மை அடையும் போதுதான் என்று சொல்வார்கள். இன்று ஜூனோ என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். இந்த திரைப்படம் பாடசாலையில் கல்வி கற்கும் ஒரு 15 வயது மாணவியின் கதை. தனது பாடசாலை நண்பனுடன் உடல் உறவு கொள்வதினால் கர்ப்பம் அடைகின்றார் ஜூனோ. ஆனாலும் கர்ப்பத்தைக் கலைத்துவிட முயற்சித்து மனம் ஒத்துக்கொள்ளாமல் விட்டுவிடுகின்றார்.
இந்த அழகான தாய்மைப் பருவம் வயது தப்பி வருவதனால் ஏற்படும் பிரைச்சனையை இந்த திரைப்படம் அழகாக விரசம் இல்லாமல் விபரிக்கின்றது.
இந்த அழகான தாய்மைப் பருவம் வயது தப்பி வருவதனால் ஏற்படும் பிரைச்சனையை இந்த திரைப்படம் அழகாக விரசம் இல்லாமல் விபரிக்கின்றது.
எங்களூரில் காதலிப்பது தெரிந்தாலே தோலுரிக்க புறப்படும் பெற்றோர் மத்தியில், அமெரிக்கப் தந்தை தன் மகள் கர்ப்பம் என்பதை சிறு அதிர்ச்சியுடன் உள்வாங்கிக் கொள்கின்றார். அத்துடன் தன் மகளின் விருப்பத்துக்கிணங்க, மகளுக்குப் பிறக்கப்போகும் குழந்தையை ஒரு தம்பதியருக்கு கொடுப்பதற்கு உதவி செய்கின்றார்.
குழந்தையை பெற்றுக் கொள்ளும் தம்பதியர் முதலில் இதில் விருப்பமாக இருந்தாலும், கணவரின் கடைசி நேர குளப்படியால் ஒரே குளப்பமாகப் போய்விடுகின்றது. இப்போது ஜூனோவின் குழந்தையை யார் பெற்றுக்கொள்வர்??? நல்ல கேள்விதான, ஆனா திரைப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தையின் உண்மைத் தந்தை, ஜூனொவின் பாடசாலை நண்பன் ஜூனொவை விட்டு வேறு ஒரு பெண்ணை வெளியே கூப்பிட்டதும் ஜூனோ அடையும் குளப்பம் அடையும் கோபம் ஏமாற்றம் எங்களையும் கலங்க வைக்கின்றது.
குடும்பங்களில் சரியான வயதில் பேசப்பட வேண்டிய விடையம் திரைப்படமாக உள்ளது. என்னைப் பெறுத்த வரையில் கட்டிளமைப் பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். சில காட்சிகள் குடும்பத்துடன் பார்க்க அருவருப்பாக இருக்கலாம், ஆனால் இப்படி எங்கள் குடும்பத்தில் நடந்து குளம்புவதை விட திரைப்படத்தைப் போட்டுக் காட்டி விடுவதே நன்று.
திரைப்படம் பார்த்து முடிந்ததும் நல்ல திரைப்படம் ஒன்று பார்த்த நிறைவு கிடைத்தது. கதையின் நாயகி யாரையோ நினைவு படுத்திக்கொண்டேயிருந்தார்….