பேஸ்புக் மொபைல் சுவாரஸ்யமான தகவல்கள்


பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் ஹோம்" என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் போன்ற இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்களை பேஸ்புக் போனாக மாற்றக்கூடியது. தைவானின் ஹெச்டிசி நிறுவனம் இந்த போனைத் தயாரிக்க உள்ளது. இந்த போன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

பேஸ்புக் போனின் 5 சுவாரஸ்யமான அம்சங்கள்

1. ஹோம் என்ற புதிய மென்பொருள், பயனாளர்களை ஆண்ட்ராய்டு போனை கூகுளால் உருவாக்கப்பட்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றக்கூடியது. இந்த புதிய மென்பொருள் தொடர்ச்சியாக பேஸ்புக் செய்திகளையும், மற்ற தகவல்களையும் இந்த போனின் ஹோமில் பார்க்க முடியும். இந்த வசதி மற்ற ஆப்ஸ்களில் கிடையாது.

2. முகப்புப் பகுதியில் எப்போதும் போல வால் பேப்பர்கள் அல்லது லாக் ஸ்கிரீனுக்கு பதிலாக ஹொம் இன்ஸ்டால் செய்வதன் மூலம் கவர் பீட் என்பதைப் பயன்படுத்துவதன் மூலம் படங்கள், உடனுக்குடன் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் பேஸ்புக் நெட்வொர்க்குடன் எப்போது தொடர்பிலிருக்க முடியும்.

3. AT&T நிறுவனம் தைவானின் ஹெச்டிசி நிறுவனத் தயாரிப்பான போன்களை விற்கும் பிரத்யேக உரிமையைப் பெற்றுள்ளது. வரும் ஏப்ரல் 12 முதல் விற்பனைக்கு வரும் இந்த போனின் விலை 100 யுஎஸ் டாலர் ஆகும். அதே ஏப்ரல் 12 ஆம் தேதியிலிருந்து ஹோம் மென்பொருளை கூகுள் ப்ளே தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கும் செய்து கொள்ளலாம். இந்த போன் இந்தியாவில் வெளியாக தற்போது வாய்ப்பிலை என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4. செய்திகள் அனுப்புவது மற்றும் தகவல் தொடர்பு ஆகிய அம்சங்கள் இன்றைய ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தலைமுறைக்கு இன்றியமையாதது. பேஸ்புக் போனில் சாட் ஹெட் என்ற புதிய செய்திப் பரிமாற்ற சாதனம் உள்ளது. இதன் மூலம் எஸ்.எம்.எஸ் மற்றும் பேஸ்புக் செய்திகளை ஒரே சாதனத்தின் மூலம் பார்க்க முடியும். பயனாளர்கள் எந்த ஆப்ஸ்-யையும் திறக்காமல் ஹோம் ஸ்கிரீனின் மூலம் தங்களது நண்பர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியும்.

5. இந்த போன் சிவப்பு, வெளிர் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கும். 4.3 ஸ்கிரீன், 5 மெகாபிக்ஸ்ல் ரியர் பேசிங் கேமரா, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மெமரி, 1GB RAM மற்றும் குவால்கம் ஸ்நாப் டிராகன் S4 பிராசஸர்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget