கமாண்டோ - இந்திய சினிமாவில் புதிய சகாப்தம்


மசில்மேன் அர்னால்ட் ஸ்வாஸ்நேகருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுத் தந்த படம் கமாண்டோ. இந்தப் படத்தை முழுமையாகவும், காட்சிகளை பிரித்தும் நூற்றுக்கணக்கான காப்பிகள் உருவாயின. மனிதன் படத்தில் ரஜினிகாந்த் கிளைமாக்ஸில் கத்தி கபடாக்களையும், வெடிகுண்டுகளையும் மாட்டுகிற காட்சி அப்படியே கமாண்டோவிலிருந்து எடுத்தது.
புலன் விசாரணையில் விஜயகாந்தை கடத்தும் பகுதி முழுக்க கமாண்டோவின் இன்ஸ்பிரேஷன். விஜயகாந்த் பெரிய மரத்தை தூக்கிவரும் காட்சியும் கமாண்டோவிலிருந்து சுட்டதுதான்.

இந்தியில் கமாண்டோ என்ற பெயரிலேயே ஒரு படம். துப்பாக்கியில் வில்லனாக நடித்த வித்யும் ஜம்பால் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம். அர்னால்ட் மாதிரியே மசிலை காட்டிக் கொண்டு நிற்கிறார்.

ஒரு சின்ன வித்தியாசம், படத்தின் பெயரை அர்னால்டின் படத்திலிருந்து எடுத்தவர்கள் கதையையும், காட்சிகளையும் எடுத்திருப்பது இன்னொரு மசில்மேன் சில்வஸ்டர் ஸ்டாலோனின் பர்ஸ்ட் பிளட் படத்திலிருந்து. தனியொரு நபராக ஒரு மிலிட்டரியையே காலி செய்யும் பர்ஸ்ட் பிளட்டை அப்படியே காதல் எல்லாம் சேர்த்து சுதேசியாக்கியிருக்கிறார்கள். நெட் ரிசல்ட், படம் சூப்பர்.

இந்தி சினிமா இந்தப் படத்தின் மூலம் ஒரு வில்லனை இழந்திருக்கிறது. பதிலான இன்னொரு ஹீரோ கிடைத்திருக்கிறார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget