5. கேடி பில்லா கில்லாடி ரங்கா
ஐந்தாவது வார இறுதியில் பாண்டிராஜின் படம் 1.5 லட்சங்களையும், வார நாட்களில் 5.6 லட்சங்களையும் வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த ஞாயிறுவரை வசூல் 4.01 கோடிகள்.
4. நான் ராஜாவாகப் போகிறேன்
நகுலின் ராஜவாகப் போகிறேன் படத்துக்கு வெற்றி மாறன் வசனம் எழுதியும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 11.2 லட்சங்கள் மட்டுமே.
3. சென்னையில் ஒரு நாள்
சின்சியரான கதையாக இருந்தால் ரசிகர்களும் சின்சியராக பார்ப்பார்கள் என்பதற்கு இந்தப் படமே சான்று. புதிய படங்கள் வெளியான நிலையிலும் சென்னையில் ஒரு நாள் வார இறுதியில் 4 லட்சங்களையும், வார நாட்களில் 10.3 லட்சங்களையும் வசூலித்து மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 2.63 கோடிகள்.
2. சேட்டை
நான்காவது வார இறுதியில் 5.6 கோடிகளை வசூலித்த படம் சென்ற வார இறுதியில் 5.6 லட்சங்களையும், வார நாட்களில் 15 லட்சங்களையும் வசூலித்து இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
1. உதயம் என்எச்4
அதே முதலிடத்தில் உதயம் என்எச்4. வார இறுதியில் 83 லட்சங்களையும் வார நாட்களில் 1.02 கோடியையும் வசூலித்து அதே முதலிடத்தில் உள்ளது. பத்து தினங்களில் இதன் சென்னை வசூல் 3.19 கோடிகள்.
சென்ற வாரம் வெளியான யாருடா மகேஷை ரசிகர்கள் முற்றாக புறக்கணித்துள்ளனர். டாப் 5 ல் இந்தப் படம் இடம் பெறவில்லை.
மே 1 ஆம் தேதி வஸந்தின் மூன்று பேர் மூன்று காதல், விஜய் சேதுபதியின் சூது கவ்வும், சிவ கார்த்திகேயனின் எதிர்நீச்சல் ஆகிய படங்கள் வெளியாவதால் பாக்ஸ் ஆபிஸில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.