
பேச்சியக்கா ஊர்வசி, மருமகன் தருண்கோபி. இந்த உறவுக்குள் நிகழும் கதைதான் பேச்சியக்க மருமகன் படத்தின் கதை என்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊர்வசி. அதுவும் கிராமத்து வேடத்தில். படமே இவரை முன்வைத்துதான் எனவும் பேசுகிறார்கள். திமிரு படத்தில் கவனத்தை ஈர்த்து தனது வாய் பேச்சால் தானே கெட்டுப்போன தருண்கோபி
பெரிய இடைவெளிக்குப் பிறகு நானும் பீல்டில்தான் இருக்கேன் என்று இந்தப் படம் வழியாக சொல்லியிருக்கிறார். பிரியங்கா, ஆசன் ஜார்ஜ் என்று இரு நாயகிகள். விபி பாலகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, சபேஷ் - முரளி இசையமைத்துள்ளனர். எஸ்எஸ் புரொடக்ஷன் எஸ் சரவணன் படத்தை தயாரித்துள்ளார். வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.