
உங்களின் உயர் கல்வியை மேற்கொள்ள, நீங்கள் கல்விக் கடனப் பெற வேண்டுமென்று முடிவெடுத்து இருக்கிறீர்கள் என்றால் அதற்கு முன்பாக கீழ்கண்ட காரியங்களைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது.
தேசிய வங்கிகள் தவிர ஒருசில தனியார் நிதி நிறுவனங்களும் உயர் கல்விக் கடனை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றன. ஆனால் நீங்கள் சரியான கல்விக் கடனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வட்டி விகிதம்
பொதுவாக கல்விக் கடனிற்கான வட்டி விகிதம் மிக அதிகமாக இருக்காது. ஓரளவு சுமாரான அளவிலே இருக்கும். ஆனால் கல்விக் கடனிற்கான வட்டி விகிதம் வங்கிகளுக்கு வங்கி வேறுபடும். மேலும் கல்விக் கடனிற்கு விதிக்கப்படும் வட்டி, நிலையானதா அல்லது நெகிழ்வு தன்மை கொண்டதா என்பதையும் பார்க்க வேண்டும். வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருந்தால், ஒருவர் நெகிழ்வு தன்மைக கொண்ட வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதே நேரத்தில் வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பிருந்தால், நிலையான வட்டி விகிதத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம்
கல்விக் கடனை வாங்க விண்ணப்பிப்பதற்கு முன்பு, கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவாக, கல்விக் கடன் பெறுபவர், படிப்பை முடித்து, அவருக்கு வேலை கிடைத்த பிறகுதான், கடனைத் திருப்பிச் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுவார். எனவே, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு போதுமான கால அவகாசத்தை வங்கி வழங்குகிறதா என்று பார்க்க வேண்டும்.
கட்டணம்
இரண்டாவதாக, கல்விக் கடனைப் பெறுவதற்கு ஆகும் ப்ராசஸிங் கட்டணம், அட்மினிஸ்ட்ரேட்டிவ் கடடணம் மற்றும் டாக்குமென்டேசன் கட்டணம் போன்ற கட்டணங்களையும் தெளிவாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக கல்விக் கடனைப் பெற விரும்பினால், நீங்கள் கொலேட்டரல் செக்யூரிட்டியை வழங்க வேண்டியிருக்கும்.
டவுன் கட்டணம்
கல்விக் கடன் ரூ.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், அதற்கு டவுண் கட்டணத்தை வங்கிகளுக்கு செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணம் வங்கிகளுக்கு வங்கி வேறுபட்டிருக்கும். குறிப்பாக இந்த கட்டணம் 5% முதல் 20% வரை இருக்கும்.
வட்டி விகித கணக்கீடு
கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். நாள் கணக்கில் இது கணக்கிடப்படுகிறதா அல்லது காலாண்டு கணக்கில் கணக்கிடப்படுகிறதா என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.