இ‌ளமை ஊஞ்சலில் பதுமையாகும் நமீதா


"அய்யர் ஐ.பி.எஸ்", "பொள்ளாச்சி மாப்பிள்ளை" போன்ற படங்களை இயக்கிய அரிராஜன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது "இளமை ஊஞ்சல்" என்ற படத்தை இயக்கியும், நடித்தும் வருகிறார். இந்தப்படம் பற்றி அரிராஜன் நம்மிடம் பேசும்போது, நமீதா, கிரண், ஆர்த்தி, மேக்னா நாயுடு, ஷிவானி சிங், கீர்த்தி சாவ்லா இவர்களோடு நான், ஷர்வானந்த், அனிஷ், மனீஷ், பிரதீப் போன்றவர்கள் நடித்துள்ளனர். படத்தின் கதை என்னவென்றால்
, ஹீரோயின்கள் 5 பேரையும் தீவிரவாதிகள் கடத்துகின்றனர். நமீதா போலீஸாக வருகிறார். அவர் எப்படி தீவிரவாதிகளிடமிருந்து அவர்களை மீட்கிறார் என்பது தான் கதை. வழக்கமான கதையாக இருந்தாலும், படத்தை எடுத்திருக்கும் விதம் ரொம்ப புதுசு. பல விஷயங்கள் படத்தில் உள்ளன. மூணாறு, ஒகேனக்கல், ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். இது ஒரு த்ரில்லர் படம், ரொம்ப விறுவிறுப்பாக எடுத்துள்ளோம். விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது என்றார். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget