நாகராஜசோழன் எம் ஏ ,எம் எல் ஏ சினிமா விமர்சனம்

பெண்பார்க்கும் படலம் நடக்கும்போது தரகர் சில சமயம் பொண்ணோட ஃபோட்டோவைத்தராம பொண்ணோட அக்கா ஃபோட்டோ கொடுத்து பார்த்தீங்களா? ரதி மாதிரி இருக்கு? இதனோட தங்கச்சிதான் நீங்க கட்டப்போற பொண்ணுனு அள்ளி விடுவார். நாமளும் மண்டையை மண்டையை ஆட்டுவோம், அப்புறம் பார்த்தா அந்த சக்க ஃபிகரோட தங்கச்சி மொக்க ஃபிகரா இருக்கும். அந்த மாதிரி தான் ஆரவாரமான வெற்றி பெற்ற அமைதிப்படை முதல் பாகம் படம் மாதிரி 20 வருஷம் கழிச்சு வந்திருக்கும்
அமைதிப்படை பாகம் 2 படமும் .


சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள்  , கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது.


 சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.  ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு .

சத்யராஜ்ன் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு .


சீமான் பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர் வரும் காட்சிகளீல் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க . 


 மலைவாசிகள் டூயட் பாடும்போது இவர் எதுக்கு கூட கையை காலை ஆட்டி எக்சசைஸ் பண்றார் ? அய்யோ பாவம் 


 இது போக மிருதுளா ( ரொம்ப மிருதுவா இருக்குமோ? )  , ஹன்சிபா , கோமல் ஷர்மா என சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை , ஐ மீன் காட்சிகள் , வாய்ப்புகள் அவங்களுக்குப்பெருசா இல்லை . 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget