கிரெடிட் கார்டு தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி?

ஆவணங்கள் தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி என்ற தலைப்பில் இன்று கிரெடிட் கார்டு தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி, அதற்கான நடைமுறைகள் என்ன? எவ்வளவு கால அவகாசம் பிடிக்கும், என்ன செலவாகும் என்பதைப் பார்ப்போம்.

கிரெடிட் கார்டு:

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். கிரெடிட் கார்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களைக் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.100 கட்டணம். இது நிறுவனத்துக்கேற்ப வேறுபடலாம். 15 வேலை நாட்கள் கால வரயறைக்குள் கிடைக்கும்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் 15 வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்