உபுண்டுவில் புதிய மொபைல் இயங்குதளம்

ஸ்மார்ட்போன் என்றாலே எல்லோருக்கும் மனதில் தோன்றுவது ஆன்டிராய்ட் போன்கள் தான். அந்த அளவிற்க்கு ஆன்டிராய்ட் ஓஎஸ் மக்களிடத்தில் பிரபலமாகி உள்ளது. ஆன்டிராய்டின் இந்த வெற்றிக்கு காரணம் அதில் உள்ள அப்ளிகேசன்ஸ் மற்றும் இதை ப்ரீயாக டவுன்லோடு செய்து கொள்ளலாம். இப்பொழுது ஆன்டிராய்டின் இடத்தை பிடிப்பதற்க்கு உபன்டு என்ற புதிய மொபைல் ஓஎஸ் வந்துள்ளது. உபன்டுவையும் நீங்கள் ப்ரீயாக டவுன்லோடு
செய்து கொள்ளலாம். 

உபன்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம் முதலில் கம்பியூட்டரின் பயன்பாட்டிற்கே தயாரிக்கப்பட்டு அக்டோபர் 20,2004ல் வெளியிடப்பட்டது. இது லினக்ஸ் உடன் கூடிய ஓஎஸ் ஆகும். இப்பொழுது உபன்டு மொபைல்களுக்கும் ஓஎஸ் தயாரித்துள்ளது. இதில் ஓஎஸ் இரண்டு வெர்சன்களில் பேசிக் மாடல் ஸ்மார்ட்போன் மற்றும் ஹை எண்ட் ஸ்மார்ட்போன்களுக்கென பிரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உபன்டு மொபைல் ஓஎஸ் இன்னும் முழுமையாக எல்லா மாடல் ஸ்மார்ட்போன்களுக்கும் தயாரிக்கப்படவில்லை. 

இந்த ஓஎஸ்ன் டிரைல் வெர்சனை நீங்கள் ப்ரீயாக டவுன்லோடு செய்து கூகுள் நெக்சஸ் போன்ற மொபைல்களில் பயன்படுத்தலாம். இந்த ஓஎஸ் ஆன்டிராய்டை விட அதிக அப்ளிகேசன்களை கொண்டுள்ளது. இதனை நீங்கள் எளிதாக ஆன்டிராய்டிற்க்கு பதில் பயன்படுத்தலாம். உபன்டுவை நீங்கள் மொபைல் மற்றும் டேப்லெட்களில் எளிமையாக இன்ஸ்டால் செய்துகொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகிறது. உபன்டு மொபைல் ஓஎஸ்ன் முழுமையான வெர்சனை அக்டோபர் 2013ல் வெளியிட அந்த நிறுவனம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்