தடை பட்ட திருமணம் மீண்டும் நடக்க எளிய வழிகள்

நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் ஏதோ காரணத்தினால், முறிந்து போனால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வது மிகவும் கடினம். கனவுகள், நம்பிக்கைகள், எதிர்காலத்தைப்பற்றிய ஆசைகள் அனைத்தும் ஒரு கணத்தில் தரை மட்டமாகியிருக்கும். 

நிச்சயதார்த்தம் முறிந்து போய் திருமணம் நின்ற பிறகு, அதன் அதிர்ச்சியிலிருந்து மீண்டு, உங்களுக்கென்று ஒரு மாறுபட்ட புதிய எதிர்காலத்தை அமைத்துக்
கொள்வதற்கான சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம். 

• பழைய காதலையும், காதலரைப் பற்றியும் நினைவுபடுத்தும் பொருள்கள் இருந்தால், அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். வாழ்க்கையில் முன்னேறிச் செல்வதற்கான கட்டாயமான முதல் நடவடிக்கை இதுவாகும். அப்பொருட்களை தூக்கி தூரப் போடுங்கள். 

• அழ வேண்டும் என்று தோன்றினால் அழுதுவிடுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுதுவிடுங்கள்.சில நாட்களுக்கு சோகத்தில் புரளுங்கள். சோகத்தை வெளிப்படுத்துகள். இறுதியில் புதிய வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள புத்துணர்வுடன் பூப்போல மலருங்கள். ஒவ்வொரு முடிவிலிருந்தும் ஒரு அழகிய தொடக்கம் பிறக்கும். 

• பழைய சகஜமான நிலைக்கு உறுதியாகத் திரும்பியவுடன், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் திருமணம் நிறுத்தப்பட்ட விஷயத்தை தெரியப்படுத்தவும். அனைவருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு, திருமணத்திற்காக நண்பர்களும் உறவினர்களும் பாசத்தோடு அளித்த பரிசுப் பொருட்களை திருப்பி அனுப்பிவிடுங்கள். வந்திருந்த பரிசுப் பொருட்களைத் தவறாமல் திருப்பி அனுப்பும்போது, "நன்றி" செய்தியுடன் அனுப்ப மறக்காதீர்கள். 

• உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். நின்றுபோன திருமணத்தை நினைவிலிருந்து மறக்க இது உதவும். உங்கள் மேல் அன்பும், பரிவும், பாசமும் காட்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களைச் சுற்றி எப்பொழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேதனையையும், சோகத்தையும் பகிர்ந்து கொண்டு, இம்மாதிரியான சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்வது என்று உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். 

• திருமண நிச்சயதார்த்தம் அல்லது திருமணம் செய்து கொள்வதென்ற முடிவு, இரண்டு நபர்களால் செய்யப்பட்டது. அடுத்தவரிடம் மட்டும் குறை கண்டுபிடிக்கத் தொடங்கி ஆராய்ந்தால், அது கோபத்தினை மேலும் தூண்டிவிடும். என்ன நடந்தது என்று கொஞ்சம் ஆராயுங்கள். 

இரண்டு பக்கமும் தவறு இருப்பதாக கருதினாலோ அல்லது உங்கள் பக்கம் மட்டுமே தவறு உள்ளது என்று கருதினாலோ, அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். தவறினை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget