பணிக்கு செல்லும் மங்கையரின் தனித் திறமைகள்

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து - வேலைபார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு முக்கிய காரணம் வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். 

வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளிஉலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசியம் என்பதால், வேலைக்குச் செல்லும் பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார்கள். 

இதனால் திட்ட மிடுதல், சுறுசுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின்றன. இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். 

இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்களிடம் வளர்கிறது. 

வேலை பார்க்கும் இடத்தில் பலதரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லுதல், பல்வேறு நெருக்கடிகளில் வரும் பொதுமக்களை சந்தித்தல், உயர் அதிகாரி - தன் சமபொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் - தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவம் போன்றவை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது. 

இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித்து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்