கர்பகாலத்தில் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்

கர்ப்ப காலத்தில் சிசுவை நன்கு வளர்ச்சி அடையச் செய்ய அவசியமான ஒன்று வைட்டமின் சி. வைட்டமின் சி அடங்கியுள்ள பொருட்களான வெண்ணெய், பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு, கார்டு லிவர் ஆயில், தக்காளிப் பழம், மாம்பழம், ,முள்ளங்கி, காரட், பறங்கிக்காய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, 

புதினா, முள்ளங்கி இலை, பச்சைக் கொத்துமல்லிக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, வெள்ளை மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரைகள், முருங்கைக் கீரை போன்றவற்றை தினமும் இயன்ற அளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதுமுண்டு. அது சில நாட்கள் தொடர்வதும் உண்டு. அப்படி இருந்தால் இரவு உணவின் அளவை மிகவும் குறைத்துப் பாலும், வாழைப்பழமும் மட்டும் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக வாய் நாற்றம் ஏற்படக் காரணம் வைட்டமின் "சி குறைவே ஆகும். 

பச்சைப் பட்டாணி, பச்சைப் பயறு, முளை கட்டியது, சிறிய-பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம், வாழைப்பழம், தக்காளிப் பழம், சிரிய மற்றும் -பெரிய வெங்காயம், முட்டைக் கோஸ், சிவப்பு-வெள்ளை முள்ளங்கிகள், வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், பேரிக்காய் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் "சி அடங்கி உள்ளது. 

இவைகளை உட்கொண்டால், வாய் நாற்றம் நீங்கும். சீரகம் அரை ஸ்பூன் போட்டுக் நன்கு கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்தால் நீர் நன்கு பிரியும். 'சுகப் பிரசவம்' ஆகும். ஆயுர்வேத மருந்தான 'மாதுளம் பழம் ஜீஸ் இரண்டு வேளைக்கு இரண்டு ஸ்பூன் அருந்தி வந்தால் குழந்தை நல்ல வளர்ச்சி அடையும். 

சில பெண்களுக்கு குழந்தை உண்டாகியிருக்கும்போது பாதங்களில் நீர் கோர்க்கும். அதற்கு குப்பைமேனி இலைகளைப் பறித்து நன்று அலம்பி வாயில் போட்டுக்கொண்டு மென்று சாப்பிட வீக்கம் வராது. 

கர்ப்பமுற்ற பெண்கள் வாரத்திற்கு 3 நாட்கள் உணவில் முருங்கை ஈர்க்கு சேர்த்து ரசம் செய்து சாப்பிடவேண்டும்.. சுக்கு காபி சாப்பிடுவது மிகவும் நல்லது ஏனெனில் அதை சாப்பிடுவதன் மூலம் நீர் சுலபமாக இறங்கும் மேலும் உடம்பும் கலகலப்பாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget