அழகுராஜா VS பி‌ரியாணி

அலெக்ஸ்பாண்டியனுக்குப் பிறகு கார்த்தி நடிக்க ஆரம்பித்த படம் பி‌ரியாணி. அதன் பிறகு அதிக நாட்கள் கழித்துதான் அழகுராஜா படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பி‌ரியாணியை முந்திக் கொண்டு அழகுராஜா வருகிறது.

பி‌ரியாணியை வெங்கட்பிரபு இயக்கியிருக்கிறார். நாளொரு விளையாட்டும் பொழுதொரு பார்ட்டியுமாக படத்தை ஓரளவு முடித்துவிட்டனர்.
ஆனால் அழகுராஜாதான் முதலில் வருகிறது. ராஜேஷ் இயக்கியிருக்கும் அழகுராஜாவில் கார்த்தியுடன் காஜல், பிரபு, சரண்யா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். 

அப்கோர்ஸ் சந்தானமும் இருக்கிறார். காமெடியை மையமாகக் கொண்ட இந்தப் படம் முதலில் வந்தால் நன்றாக இருக்கும் என்பது கார்த்தியின் எண்ணம். 

வெங்கட்பிரபுவிடம் அதனை தெரிவித்த போது, சந்தோஷமாக அழகுராஜாவே முதலில் வரட்டும் என்று கூறிவிட்டாராம். ஆக, பி‌ரியாணியை ருசி பார்க்க ரசிகர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.