தொழிற்துறையில் ஆர்வம் காட்டும் பெண்கள்


இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குன்றனர். தங்களின் கேரியரை வளர்ப்பதோடு, குடும்ப வாழ்வாதாரத்தையும் கூட்டுகிறார்கள். 

பெண்களே உங்கள் முதலீடுகளுக்கு, நிதி குறிக்கோள்களுக்கு இன்றே திட்டம் போடுங்கள். பணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் முதலீட்டு பாங்கையும் ஆலோசித்து புரிந்து கொள்ளுங்கள்.
அப்போது தான் கஷ்ட காலங்களில் அது கைகொடுக்கும். 

• தங்கம் தான் ஒவ்வொரு பெண்ணின் மிக விருப்பமான பொருளாகும். தங்க நகைகளில் முதலீடு செய்வது என்பது ஒரு சிறந்த தேர்வாகும். தங்கத்தில் முதலீடு செய்வதென்பது சிறந்தது. அப்படி செய்ய முடிவெடுத்தால் தங்கம் காசுகள் வடிவில் முதலீடு செய்யலாம். 

• உடல் ஆரோக்கியமே சிறந்த சொத்து என்பதை நாம் மறந்து விடக் கூடாது. விலைவாசி ஏற்றம், மருத்துவச் செலவுகள் உங்கள் சேமிப்பை கரைத்து விடும். எனவே காப்பீடு எடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. 

• வங்கியில் நிரந்தர வைப்பு பாதுகாப்பு என்ற அம்சத்தை மனதில் வைத்து, பல பெண்களுக்கு பிடித்த முதலீடாக விளங்குகிறது. வைப்பு நிதி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் வருமான வரி பிரிவு 80C-யின் கீழ் வருமான வரி விலக்கும் கிடைக்கும். 

• பி.பி.எப்-ல் பணத்தை முதலீடு செய்தால், பணியில் இருந்து ஓய்வு பெற்றப்பின் அது பெரிதும் உதவும். முதலீடு பாதுகாப்பாக இருக்க விருப்பம் கொண்டவர்கள் இந்த முதலீட்டில் பணத்தை போடலாம். 

• தொடர் வைப்புத்தொகைக்கு நிகரானது மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி(SIP). வங்கியின் வைப்பு நிதிகளுக்கு மேலாக லாபம் ஈட்ட வேண்டுமானாலும் அதே போல் பங்குச்சந்தையில் போதிய அனுபவம் இல்லையென்றாலும், மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget