செல்லமே விஷாலின் செமத்தியான அவதாரங்கள்

‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானவர் விஷால். இதுவரை 12 தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்டத்து யானை’ படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அடுத்ததாக ‘மதகஜ ராஜா’ படமும் வெளியாக உள்ளது. தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாண்டிய நாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதுவரை நடிகராக மட்டுமே இருந்து வந்த விஷால் ‘பாண்டிய நாடு’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். சொந்தமாக படக்கம்பெனியை உருவாக்கி அதன்மூலம் இந்த படத்தை தயாரித்து வருகிறார். 

இந்நிலையில், தற்போது விநியோகஸ்தராகவும் மாறியுள்ளார். பூபதிபாண்டியன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவர இருக்கும் ‘பட்டத்து யானை’ படத்தை சென்னை முழுவதும் வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார். 

அதுதவிர, தன்னுடைய நீண்ட நாள் ஆசை ஒன்றையும் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது, இவர் வில்லனாக நடிக்க ரொம்ப நாள் ஆசையாம். ‘அவன் இவன்’ படத்தில் பெண்மை கலந்த வேடத்தில், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துவிட்டேன். ஆனால், வில்லன் கதாபாத்திரம்தான் இதுவரை கிடைக்கவில்லை. அப்படி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன் என்று சொல்கிறார். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்