குத்துச் சண்டையில் குமுற வரும் பிரியங்கா சோப்ரா

குத்துச் சண்டைப் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் பெற்றவர் மேரி கோம். இவர் மணிப்பூரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடின முயற்சியால் படிப்படியாக வளர்ந்து, உலக அளவில் குத்துச் சண்டையில் புகழ்பெற்று விளங்குகிறார்.

இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்கள். இந்த படத்தில் மேரிகோம் வேடத்தில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இப்படத்திற்காக கடுமையாக பாக்ஸிங் பயிற்சிகளை எடுத்து வருகிறார் பிரியங்கா. 

பாக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதற்காக சமீபத்தில் மேரிகோமை சந்திக்க அவரது சொந்த ஊரான மணிப்பூரிலுள்ள இம்பால் நகருக்கு சென்று, அவருடன் சில நாட்கள் தங்கி பாக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்துவிட்டு வந்துள்ளார். மேலும், மேரிகோமின் பயிற்சியாளரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது இயக்குனர் ஓமாங்குமாரும் உடனிருந்தார். 

இப்படத்திற்காக தினமும் எட்டுமணி நேரம் குத்துச்சண்டை பயிற்சி வருகிறாராம் பிரியங்கா. இவர் போதுமான பயிற்சி பெற்றதும் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்துள்ளனர். இப்படம் தன்னுடைய சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்