மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி

மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். பொதுவாக 50 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வருகிறது. 

எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனும் இதற்கு ஒரு காரணமாகிறது.
தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் ஆகியவை மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். 

ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஈஸ்ட்ரோஜென் சுரப்பை கட்டுப்படுத்துவதன் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். பழங்கள், காய்கறிகள், புரோட்டீன் உள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

அசைவத்தில் ஆட்டுக்கறி, மீன், மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். இதே போல் பால் மற்றும் பால் பொருட்கள், நெய், வெண்ணெய், டீ, காபி, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, பிஸ்தா தவிர்க்கவும். 

பழ வகையில் பப்பாளி தவிர்க்கவும். காய்களில் உருளைக்கிழங்கு, பீன்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகிவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும். முட்டைக்கோஸ், கேரட், பூசணி, சர்க்கரைப் பூசணி, காளான், பூண்டு, மிளகு, பாலக்கீரை ஆகியவற்றை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். 

ஆப்பிள், செர்ரி, மாதுளை, திராட்சை மற்றும் தர்பூசணிப் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகளில் சோயாபீன்ஸ், கிட்னி பீன்ஸ், கருப்பு பீன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்