ஹம்மிங் பேர்டு சினிமா விமர்சனம்

நடிகர் : ஜேசன் ஸ்டேதம்
நடிகை : அகதா பசக்
இயக்குனர் :ஸ்டீவன் நைட்

எலும்பு முறிவு ஏற்பட்ட கைகள், கண்ணாடியின் முன் பார்க்கையில் தேகமெங்கும் காயம், முகமெங்கும் பூசப்பட்ட அவமானம், போதை மருந்து விற்பனையாளர்களால் துரத்தப்பட்டு திருட்டுத்தனமாக வேறொருவர் வீட்டிற்குள் புகும் டிரான்ஸ்போர்ட்டர்
நாயகன் “ஜேசன் ஸ்டேதம்”. படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இது இவருடைய வழக்கமான மசாலா படமல்ல என்ற எண்ணம் பசுமரத்தாணி போல் பதிந்து விடுகிறது.

ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளால் தாக்கப்படும் ஜேசன், மிலிட்டரி டேங்கர் தாக்கப்பட்டதில் உடன் பணிபுரிந்த அதிகாரிகள் உயிர் இழக்கின்றனர். கோபத்தில் அப்பாவி வேறொருவரை தீவிரவாதி எனக் கருதி துப்பாக்கிக்கு இறையாக்க பட்டாளத்து விதிகளின் படி கோர்ட் மார்ஷல் செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுகிறார் ஜேசன்.

ஆஃப்கானிஸ்தானிலிருந்து லண்டனுக்கு பயணிக்கும் கதைக்களம். பட்டாளத்தான் பரதேசியாய் லண்டன் தெருக்களில், ஜேசனுடன் போதை மருந்து விற்கும் தோழி இஸபெல்லா. குடியுடன் குன்றிய நிலையில் இருக்கும் ஜேசன் தெருவில் சண்டித்தனம் செய்யும் இரு நபர்களால் துரத்தப்படுகிறார். திருட்டுத்தனமாக வேறொருவர் வீட்டிற்குச் செல்லும் ஜேசன், வீட்டில் யாருமில்லாமல் போக அதை தன் வீடாக மாற்றிக் கொள்கிறார்.  வீட்டின் உடைமைகளையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்.

ஜேசன் பரதேசியாய் திரிகையில் உதவி புரிந்த கிருஸ்துவ சந்நியாசினி மீது நேசம் கலந்த காதல் வருகிறது.  தான் சந்நியாசினி (நன்) என்பதை உணர்ந்தும் அந்தப் பெண்ணும் காதலில் விழுகிறார்.  தான் பலர் வாழ்வில் மாற்றம் உண்டாக்க வேண்டுமென நினைக்கும் அப்பெண் ஜேசனை திருந்தி வாழக் கூறுகிறார்.  ஹோட்டலில் வேலை பார்க்கும் ஜேசன், அங்கே வம்பு செய்பவர்களை அடித்துத் துவைக்கிறார். இதை கவனித்த முதலாளி இவரை அடியாளாக நியமித்து, கடத்தலுக்கும் வசூலுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்.

இஸபெல்லா இறந்ததாக செய்தி வர ஜேசன் மனமுடைந்து போகிறார்.  இவர் கடந்த கால கசப்பான அனுபவங்களும் இவரை நினைவலயாய் தொடர்ந்து துரத்துகிறது.  பாவமன்னிப்பைத் தேடும் ஜேசன் கடைசியில் என்ன செய்தார்??  தான் விரும்பிய சந்நியாசினியுடன் இணைந்தாரா??   என்பது க்ளைமாக்ஸ்.

ஆக்ஷன்-த்ரில்லர் என வகைப்படுத்தப்படும் இப்படம் வெறும் டார்க் நாடகமாகத் திகழ்கிறது.  கதையை முழுதாக விவரிக்க திரைக்கதை ஈர்க்கத்தக்க அம்சங்கள் குன்றியே காணப்படுகிறது.  எதிர்பாரா திருப்பங்களும், பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளும் இல்லை.  சிலாகித்துப் போக வைக்கும் அழகிய தருணங்களும் இல்லை.

பறவைகளிலேயே மிகச் சிறிய பறவையும் பின் நோக்கியும் பறக்கக் கூடிய தன்மையும் பெற்ற ஒரே பறவையானது ஹம்மிங் பேர்ட் .  வாழ்வில் வீழ்ச்சியடைந்து மனிதன் தான் இறந்த காலத்தில் செய்த பிழைக்கு நிகழ்காலத்தில் எப்படி பாவமன்னிப்பை தேடிக் கொள்கிறான் என்பது தான் இப்படம்.

மொத்தத்தில் பொழுது போக்கிற்காக பார்க்கப்படும் படம் இதுவல்ல.  டார்க் டிராமா படங்கள் மீது பற்று கொண்டவர்கள் இதை நோக்கலாம். வருடத்தில் கடந்து செல்லும் படங்களில் இதுவும் என்றால் மிகையல்ல. 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget