உலகக் கோப்பை கிரிக்கெட் 2015 முழு விவரம்

ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து ஆகிய 2 நாடுகள் நடத்தும் 2015ஆம் ஐசிசி. கிரிக்கெட் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் இந்தியா, முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

பிப்ரவரி 14ஆம் தேதி ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து அணிகள் தங்களது எதிரணியினருடன் தங்கள் சொந்த நாட்டில் மோதுகின்றனர். முதல் போட்டி ஹேக்லி ஓவல்
மைதானத்தில் நியூசீலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. இதே நாளில் ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து அணிகள் மெல்பர்ன் மைதானத்தில் மோதுகின்றன.

பிப்ரவரி 15ஆம் தேதி அடிலெய்டில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பிரிவுகள் மற்றும் மேல் விவரங்கள்:

பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, இலங்கை, பங்களாதேஷ், நியூசீலாந்து, இரண்டு தகுதி பெறும் புதிய அணிகள்

பிரிவு பி: இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஒரே ஒரு தகுதி பெறும் புதிய அணி.


* இந்தியா vs பாகிஸ்தான் - அடிலெய்ட் (பிப்ரவரி 15)

* இந்தியா vs தென் ஆப்ரிக்கா - மெல்போர்ன் (பிப்ரவரி 22)

* இந்தியா vs தகுதி 4 - பெர்த் (பிப்ரவரி 28)

* இந்தியா vs மேற்கு இந்திய தீவுகள் - பெர்த் (மார்ஸ் 6)

* இந்தியா vs அயர்லாந்து - ஹாமில்டன் (மார்ச் 10)


* இந்தியா vs ஜிம்பாப்வே - ஆக்லாந்து (மார்ச் 14)


பிப்ரவரி - மார்ச் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது மொத்தம் 49 போட்டிகள் 44 நாட்களில் நடத்தப்படுகிறது. 14 நகரங்களில் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு மிக கடினமாகும் இந்த உலகக் கோப்பை. ஏனெனில் அதற்கு சற்று முன்புதான் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இந்தியா, இப்படித்தான் 1992 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னால் ஆஸ்ட்ரேலியாவுடன் 5 டெஸ்ட் போட்டிகளில் மோதி ஒரு முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் மோதி கடைசியில் உலகக் கோப்பையில் கோட்டைவிட்டது.

ஆனால் இந்தியா இருக்கும் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் தவிர மற்ற அணிகள் ஒன்றுமில்லை. இந்தியாவுக்கு சுலபமான பிரிவு வந்துள்ளது என்றே கூறவேண்டும்.

இறுதிப் போட்டி பாரம்பரியப் புகழ்மிக்க மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்பர்னில் நடைபெறுகிறது.

பழைய பதிவுகளை தேட