வார்ம் பாடிஸ் ஹாலிவுட் சினிமா விமர்சனம்

நடிகர் : நிக்கோலஸ் ஹால்ட்
நடிகை : தெரஸா பால்மர்
இயக்குனர் :ஜோநாதன் லெவின்

நாம் ஹாலிவுட்டில் பல வகையான திகில் படங்கள் பார்த்திருப்போம். அந்த வகைகளில் ஜோம்பைஸ் படங்கள் நமக்கு மிகவும் பரிச்சயமானவை. (உதாரணம் ரெசிடண்ட் ஈவிள் படவரிசை, வோர்ல்டு வார், டவான் ஆப் டெட்) இவை அனைத்தும் நம்மை மிரட்டின.
ஆனால் சற்று வித்தியாசமாக திகிலுடன் சேர்ந்து சிரிக்கவும் வைத்துள்ளது இப்படம். ரெசிடண்ட் ஈவிள் படத்தை கொஞ்சம் உல்டா பண்ணி சிறிது காதல், காமெடி தூவினால் அதான் வார்ம் பாடிஸ் (WARM BODIES). சும்மா சொல்லக்கூடாது ஜோம்பைஸ் எனப்படும் ஜந்துவை வெச்சு சந்து கேப்பில் சிந்து பாடிவிட்டனர். இதுவரை திகிலாக பார்த்து பழக்கப்பட்ட ஜோம்பைஸ் கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்.

உலகம் முழுக்க டி-வைரஸ் தாக்கி பலர் இறக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இடங்களை தடுப்பு போட்டு தடுத்து பாதுகாப்பாக மனிதர்கள், மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதை தயாரிக்க மூலப்பொருள் தேவை. அது தடுப்பிற்கு வெளில இருக்கு. அதாவது ஜோம்பைஸ் வாழற பகுதில இருக்கு. ஹீரோயின் தலைமை அதிகாரியோட பொண்ணு. சோ...  தைரியமா பாப்பாவும் அவங்களோட அஞ்சு ஃப்ரெண்ட்ஸும் களத்துல இறங்குறாங்க. மாட்டிக்குறாங்க.. அஞ்சுபேர்ல மூணு பேர் ஜோம்பைஸ்க்கு இரை. மிச்சம் ஹீரோயினும் ஒரு உயிர்த்தோழியும். இப்பதான் ஹீரோ இன்ட்ரோ. இதுல ஹீரோ ஒரு ஜோம்பைஸ். ஹீரோயினை கண்டதும் லவ்வுறார் (லவ் பண்ணும்போது இப்படிதான்... மிருகம் மனிதனாகும் அப்புறமா கல்யாணத்துக்குப்பின் மிருகமாய்டுவாங்க...). மத்த ஜோம்பைஸ் கிட்ட இருந்து காப்பாத்தி தன் இடத்துக்கு கூட்டிட்டு போய்...கூட்டிட்டு போயி.. வச்சு காப்பத்தறார்னு சொல்ல வந்தேன். அந்த தோழிய... மீட்புப்படை வந்து கூட்டிட்டு போறாங்க. ஆனா ஹீரோயினை தேடல.. அப்புறம் எப்படி படத்த ஓட்றதாம்...?

சரி... படத்துல வில்லன் வேணுமே...டைரக்டர் அங்க தான் நிக்கறார். ஜோம்பைஸ்-ல ரெண்டு கேங்கா பிரிச்சுட்டார். ஒண்ணு ஹீரோ மாதிரி கொஞ்சம் கொஞ்சமா குணமடைஞ்சுட்டு வர்ற குரூப். இன்னோன்னு... வெறி முத்திப்போன குரூப் அவங்களுக்கு மேல் தோல் இருக்காது. பயங்கரமான தோற்றம். ரெண்டு பேரும் சேந்தாங்களா...?  குணமடைஞ்சாங்களா? என்பது மிச்ச சொச்சம்.

படத்துல ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் (ஐ ஜாலி..). ஆனா திரைக்கதை அதை மறைச்சுடுது. வசனங்கள் அனைத்தும் தேவையான அளவே உள்ளன. இயல்பாகவே உள்ளன. வசனங்கள் மிக மிக கம்மி. சில காட்சிகளில் தட்டு தடுமாறி பேசும் ஹீரோவின் வசனங்கள் கேட்கவே இல்லை.

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்:

1.கதை மற்றும் திரைக்கதை அமைத்த விதம்.

2.படத்தின் நீளம் 1.30மணி மட்டுமே. கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் வைத்தது.

3. படத்தின் ஹீரோ ஆரம்பக்காட்சி... உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது ஹீரோயினைப் பார்த்து ஸ்லோ மோஷனில் லவ்வுவது. (எந்த மோஷன்லயும் அண்ணன் லவ் தான் )

4. பின்னணி இசை. காமெடிக்கும், திகிலுக்கும் ஏற்றவாறு மாற்றி மாற்றி அமைத்தது.

5. கதைக் களத்திற்கு ஏற்ற செட் அமைப்பு. ஆர்ட் டைரக்சன் கன கச்சிதம். 

6. கடைசி அரை மணி நேர பர பர காட்சிகள்.

7. ஹீரோவிற்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும் காட்சி, கூலிங்கிளாஸ் மாட்டி நையாண்டி செய்யும் சில காட்சிகள்.

8.போதுமான அளவு கிராஃபிக்ஸ். மொத்தத்தில் எல்லாம் அளவிற்கு மிகாமல் திகட்டாத வண்ணம் இருக்கு.

இயக்குநரிடம் சில கேள்விகள்:

1. ஹீரோயினைப் பார்க்கும் போது மட்டும் எப்படி லவ் வந்துச்சு. இதுக்கு முன்னாடி எந்த பொண்ணையும் பார்த்தது இல்லையா? அந்த அளவு பெரிய ஃபிகர் இல்லையே?

2. ஜோம்பைஸ்க்கு யோசிக்கற சக்தி இருக்கா? மனுஷனால கூட அது முடியல.

3. ஏன் இடையிடயே பிட்டு பிட்டா ஹீரோயினோட பழைய காதல் கதை. அவன் தான் முதல் சீன்லையே பூட்டானே...1.30 மணி நேரம் ஓட்டவா? அந்த லவ் ஃபிளாஸ்பெக்கில் கூட கிளு கிளுப்பு கம்மி ) 

4. தடுப்பு சுவரை விட்டு வெளில போக ஹீரோயினுக்கு மட்டும் எப்படி இரகசிய வழி தெரிகிறது? மோப்ப சக்தி இருக்கற ஜோம்பைஸ்னால கூட கண்டுபிடிக்க முடியல.

5. படம் பூரா ஹீரோ ஹீரோயின் ராஜ்ஜியம்தான்.ஒரு வேளை அவுங்கதான் புரொட்யுசர்ஸா?

6. ஹீரோயினை பார்த்த உடனே ஹீரோ மனுஷனா மாற ஆரம்பிக்கறார். மருந்துக்குகூட மருந்த பத்தி காட்லையே....

7. ஹீரோயினுக்கு ஜோம்பைஸ் மேல லவ் வர்றதுக்கு சரியா காரணம் சொல்லல. இந்தக்காலப் பொண்ணுங்க மனுஷனைக்கூட நம்பாம அப்பப்ப டெஸ்ட் வைக்குறாங்க 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget