இந்த ஆண்டில் முதல் பாதியில் செம ஹிட்டான படங்கள்

2013ம் ஆண்டு பிறந்து 6 மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த ஆண்டின் முன் பாதியில் வெளியான படங்களில் எத்தனை ஹிட்டாகின என்று பார்ப்போம். 2013ம் ஆண்டு இப்பொழுது தான் பிறந்தது போன்று இருக்கிறது. ஆனால் அதற்குள் 6 மாதங்கள் ஓடிவிட்டன. இந்த 6 மாதங்களில் எத்தனையோ தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. பல படங்கள் திரைக்கு வந்தபோதிலும் ஒரு சில படங்களே ஹிட்டாகின.
அவை எந்தெந்த படங்கள் என்று பார்ப்போம்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா : ஜனவரி 11ம் தேதி ரிலீஸான கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் சூப்பர் ஹிட்டானது. காரணம் காமெடி தான். இந்த படம் தான் பவர்ஸ்டாரின் மார்க்கெட்டை கண்டபடி எகிற வைத்தது.

விஸ்வரூபம் : பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு பிப்ரவரி 7ம் தேதி தமிழகத்தில் ரிலீஸான கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் வசூலை அள்ளிக் குவித்தது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா : பாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் மார்ச் 29ம் தேதி வெளியான காமெடி படமான கேடி பில்லா கில்லாடி ரங்கா ஹிட்டானது.

எதிர்நீச்சல் : தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடிப்பில் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி வெளியான எதிர்நீச்சல் ஹிட் படங்கள் வரிசையில் சேர்ந்தது.

சூது கவ்வும் : புதுமுக இயக்குனர் நளன் குமாரசாமியின் படமான சூது கவ்வும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸ் ஆனது. விஜய் சேதுபதி நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

தீயா வேலை செய்யணும் குமாரு : சுந்தர் சி. இயக்கத்தில் சித்தார்த், ஹன்சிகா, சந்தானம் நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு கடந்த மாதம் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடும் இந்த படம் ஹிட்டாகியுள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget