மாறி வரும் நாகரீகமும் மங்கையரின் வாழ்க்கையும்

நம் முன்னோர் நம்மை நல்வழியில் நெறிபடுத்துவதற்காக பல அறிவுரைகளை வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர்.அவற்றின் உண்மைக் காரணம் அறியாமலேயே நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். 

சந்தேகத்துடனும், பழக்கதோஷம் காரணமாகவும் அந்த அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவதை விட உண்மை  நிலவரம் அறிந்து பின்பற்றலாம்.
அதில் சில நம்பிக்கைகள் இக்காலத்திக்கேற்றவாறு திருத்தங்களுக்கு உள்ளாக வேண்டியவை என்பதையும் மறந்துவிடக்கூடாது. 

பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் சமயத்தில் உடல் நலத்தில் அயர்ச்சியும் பலவீனமும் உண்டாகும். அதனால் தான் அக்காலத்தில் பரிபூரண ஓய்வு கொடுக்க வேண்டி அன்றாட வேலைகளிலிருந்து அவளை ஒதுக்கி வைத்தனர். சத்துள்ள ஆகாரம் கொடுத்து அவள் உடல் நலத்தைப் பேணுவதில் கவனம் செலுத்தினார்கள். 

இன்று வேலை,தனிக்குடித்தனம் போன்ற காரணங்களால் உடலுக்கு என்னவானாலும் அவரவர் கடமையை செய்யும் கட்டாயத்தில் உள்ளோம். பல கிராமங்களில் ஏன் நகர்ப்புறங்களில் கூட பழைய சம்பிரதாயத்தைப் பிடித்துக் கொண்டு அந்த சமயங்களில் வீட்டுக்கு வெளியேயோ உபயோகமற்றதை போடும் தனி அறையிலோ பெண்களுக்கு இடம் கொடுப்பது தேவையற்றது. 

பெண்கள் நகைகள் அணிய காலங்காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. கைகளில் வளையல்கள் அணிவதால் மணிக்கட்டு பகுதி சிறப்பாக செயல்படுகிறது என்றும், காலில் மெட்டி போடுவதால் கருப்பையின் வளர்ச்சி சீராக உள்ளது என்றும் இரு கைகளிலும் வங்கி அணிவதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்க படுகிறது என்றும் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மெட்டி ஒலிக்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருப்பது நம் எத்தனை பேருக்கு தெரியும்? பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் ஆபரணங்கள் பெரும் பங்கு வகிக்கிறது என்பதை அறிந்தே நகைகள் அணிந்து கொள்ளும் முறை வழக்கமாக்கப்பட்டுள்ளது. 

ஆனால் தற்போது நாகரீக வளர்ச்சியில் வளையல்கள் கூட மறைந்து வருகின்றன. மாறாக தொப்புளில் கம்மல்கள் இடம் பெயர்ந்து விட்டன. அக்காலத்தில் பெண்கள் மரியாதை காரணமாக கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது என்று சொல்வார்கள்.

ஆனால் உண்மையில் பெண்கள் அவ்வாறு உட்கார்ந்தால் அவர்களின் கருப்பை பாதிப்புக்குள்ளாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. மூக்கு குத்தினால் பொறுமை, சாந்த குணம் ஏற்படும் என நம்புகிறோம். இவ்வாறு செய்தே எங்களை அடக்கி ஆள்கிறார்கள் என போர்க்கொடி தூக்குவோரும் உண்டு. 

கர்ப்பகாலத்தில் வளைகாப்பு நடத்தி பெண்கள் கை நிறைய கண்ணாடி வளையல் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. அர்த்தம் தெரியாமலேயே இதையும் பின்பற்றுகிறோம்.அவ்வாறு அணிவது வயிற்றிலிருக்கும் குழந்தையின் கேட்டும் திறனை அதிகரிக்கிறது. அதனால் தோழிகளே காரணம் அறிந்து காரியம் நிறைவேற்றுவோம்.சரியா?
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget