கேட் தேர்வு எழுதுபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

ஐ.ஐ.எம்.,கள் மற்றும் நாட்டின் இதர புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் கேட் தேர்வு நெருங்கும் நேரமிது. பல்வேறான வழிகளில், கடுமையாக முயன்று தங்களை தேர்வுக்காக மாணவர்கள் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கணினி அடிப்படையிலான கேட் தேர்வுக்கு தீவிரமாக படித்துவரும் மாணவர்களுக்கு, இன்னும் இரண்டு
மாதங்களுக்கும் மேலான நேரம் உள்ளது. அக்டோபர் 16 தொடங்கி, நவம்பர் 12 வரை, 20 நாட்களுக்கும் மேலாக இத்தேர்வு நடத்தப்படும்.

இதற்கான பதிவு, ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெறும். இதே காலகட்டத்தில், கேட் வவுச்சர்களை(CAT vouchers), ஐ.ஐ.எம்.,களிடமிருந்து நேரடியாக ஆன்லைனில் வாங்கிக் கொள்ளலாம்.

பொதுவான நிலையில், இத்தேர்வு, கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படும் CAT format, அதன் இரு பிரிவுகளிலும், மாணவர்கள் தெளிவான அறிவைப் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. இதன் காரணமாகவே, இத்தேர்வை கடினமான ஒன்றாக மாணவர்கள் உணர்கிறார்கள்.

இரண்டு பிரிவுகளைக் கொண்ட கேட் தேர்வு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 30 கேள்விகளைக் கொண்டுள்ளது. முதல் பிரிவில், quantitative ability and data interpretation தொடர்பான கேள்விகள் இருக்கும்.

இரண்டாம் பிரிவில்,  verbal ability and logical reasoning தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு பிரிவுக்கும் 70 நிமிடங்கள். கடந்த மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளைப் போலவே, தேர்வெழுதுவோர், பிரிவுகளுக்கு இடையே செயல்பட முடியாது.

முந்தைய நடைமுறைகளில், தேர்வெழுதுவோருக்கு சில சலுகைகள் கிடைத்தன. ஆனால், இப்போதைய நடைமுறையில் அது இல்லை. ஒரு பிரிவில் சிறப்பாக செயல்பட்டு, இன்னொரு பிரிவின் செயல்பாடு மோசமாக இருந்தால், அது ஏற்கப்படாது. அதுதான் இப்போதைய சிக்கலே. அனைத்துப் பிரிவுகளுக்கான மதிப்பீடுகளும் சமமே.

தேர்வெழுதுகையில், நேரத்தை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம். அப்போதுதான் அதிக கேள்விகளை எதிர்கொள்வதை உறுதிசெய்ய முடியும்.

கணிதம் சாராத பட்டதாரிகளை மனதில் வைத்தே, புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம், அவர்களுக்கான வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுகிறது. எனவே, தேர்வுக்கு தயாராகும்போது, ability and aptitude, interest, time available and other pressures உள்ளிட்ட அம்சங்களை மனதில் வைத்து, மாணவர்கள் உழைக்க வேண்டும்.

தேர்வுக்காக இன்னும் படிக்கத் தொடங்காதவர்கள், அடிப்படைகளை நன்கு தெளிவாக்கிக் கொண்டு, வெவ்வேறு வகையான கேள்விகளை மனதில் கொண்டு, மாதிரி தேர்வுகளை எழுதிப் பார்த்தல் நல்லது.

கேட் பற்றிய சில தகவல்கள்

* நாடு முழுவதும் 40க்கும் மேற்பட்ட மையங்களில் இத்தேர்வு நடத்தப்படும்.

* ஐ.ஐ.எம் - இந்தூர் இத்தேர்வை நடத்துகிறது

www.cat2013.iimidr.ac.in என்ற வலைதளத்தில், இந்தாண்டு(2013) கேட் தேர்வைப் பற்றிய விபரங்களைப் பெறலாம்.

ஐ.ஐ.எம்.,கள் தவிர, நாட்டின் இதர புகழ்பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்கள், கேட் தேர்வு மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன.

Promerit என்ற அமெரிக்க அமைப்பு, கணினி அடிப்படையிலான தேர்வை நடத்துகிறது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget