விண்டோஸ் எட்டும் தொழிற்நுட்ப பிட்டும்

டச் கீ போர்ட் : மாறா நிலையில், டச் கீ போர்ட் செயல்படுகையில் நாம் டைப் செய்திடுகையில், சில ஒலிகளை எழுப்பும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தைப் கேப்பிடல் எழுத்தாக மாற்றுகையில், ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், வாக்கியத்திற்கு புள்ளி வைத்தல் என இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒலியைத் தரும். இதில் சில உங்களுக்குச் சிரமமாக இருந்தால், அதனை நீக்கிவிடலாம்.