டி.ஆர் புத்தம் புதிய குத்தாட்டம்

கிருஷ்ணா, விதார்த், எரிக்கா பெர்னான்டஸ், தன்ஷிகா, வெங்கட் பிரபு நடிக்கும் படம் விழித்திரு. அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய
மீரா.கதிரவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் டி.ராஜேந்தர் ஒரு குத்துப்பாடலை எழுதி அதை பாடி அதற்கு மும்பை அழகிகளுடன் ஆட்டமும் போட்டிருக்கிறார்.தனது படங்கள் தவிர மற்ற படங்களில் டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார், ஆடியிருக்கிறார். ஆனால் பாடல் எழுதியதில்லை. விழித்திரு படத்திற்காக 3 வேலைகளையும் செய்திருக்கிறார். "வாடி என் சில்சிலா, காட்டாத சல்சலா..." என்று துவங்கும் இந்த பாடலின் காட்சிகள் பின்னி மில்லில் செட் போட்டு படமாக்கப்பட்டது. பாடலுக்கு சத்யன் மகாலிங்கம் என்ற புதுமுகம் இசை அமைத்திருக்கிறார்.இந்த பாடலில் டி.ராஜேந்தருடன் மஸ்காரா புகழ் அஸ்மிதா, மும்பை மாடல் அழகி சனா சூரி, ஆடியுள்ளனர். இன்றைய இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் ஆடி தீர்த்தாராம். டி.ராஜேந்தர் கடைசியாக ஆர்யா சூர்யா என்ற படத்துக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார்.

பழைய பதிவுகளை தேட