மொட்டையடித்த தில் நடிகை

சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் நடிகைகள் கதைக்காக உடல் எடையை அதிகரிப்பது. எடை குறைப்பது என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால்,
கதைக்காக நிஜத்திலே மொட்டையடிப்பது என்பது யாரும் செய்யத்துணியாத விசயம். ஆனால், கிடா பூசாரி மகுடி படத்தில் நடித்துள்ள கேரளத்து நடிகை நட்சத்திரா நிஜமாலுமே மொட்டையடித்தால் காட்சி தத்ரூபமாக இருக்கும் என்று டைரக்டர் சொன்னதும் உடனே ஓகே சொல்லி விட்டாராம்.
இதுபற்றி நட்சத்திரா கூறுகையில், இந்த கிடா பூசாரி மகுடி படம் பக்கா நேட்டிவிட்டி கதையில் உருவாகியிருக்கிறது. அன்பு, பாசம், உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருக்கிறது. தியேட்டருக்கு வருபவர்கள் உறவுகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது. அதனால் அப்படிப்பட்ட இந்த கதையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விசயத்துக்காக நான் மொட்டையடிப்பேன். அது நிஜமாலுமேஇருந்தால் ரொம்ப இயல்பாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்தார். அதனால் நான் நடிக்கிற முதல் படமே என்னை பேச வைக்க வேண்டும் என்பதற்காக மொட்டையடித்து நடித்தேன். இப்போது அனைவருமே இதைப்பற்றித்தான் பேசுகிறார்கள்.

மேலும், இந்த படம் வெளியான பிறகு எனது கேரக்டர் பெரிய அளவில் பேசப்படும். அதோடு, இன்னும் பெரிய பெரிய வாய்ப்புகளெல்லாம் என்னைத்தேடி வரும் என்று சொல்லும் நட்சத்திரா, தற்போது கேரளாவில் இருந்தபோதும், கிடா பூசாரி மகுடி படம் வெளியாகும்போது சென்னைக்கு வந்துவிடுவாராம். லட்சுமிமேனன் பாணியில் தமிழ் படங்களில் நடிப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக இறங்கவும் திட்டமிட்டிருக்கிறாராம்.

பழைய பதிவுகளை தேட