இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போன்

இன்டெக்ஸ் நிறுவனம் அதன் புதிய பட்ஜெட் கிளவுட் தொடர் ஸ்மார்ட்போனான கிளவுட் M5 II ஸ்மார்ட்போனை ரூ.4,799 விலையில்
அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக Flipkart வலைத்தளத்தில் இருந்து கிடைக்கும். 

டூயல் சிம் (WCDMA+GSM) ஆதரவு கொண்ட இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட் இயங்குகிறது. இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போனில் 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. பட்டியலின் படி, இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் (SC7731) ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. 

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போனில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. குறைந்த வெளிச்சத்தில் தெளிவான புகைப்படம் எடுக்க இரண்டு கேமராக்களிலுமே எல்இடி ஃபிளாஷ் உள்ளது. கிளவுட் M5 II பின்புற கேமராவில் பனோரமா மற்றும் தொடர்ச்சியான காட்சிகள் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பமாக, 3ஜி, ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ், Wi-Fi 802.11 b/g/n, FM ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி, ஜிஎஸ்எம் மற்றும் ப்ளூடூத் ஆகியவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. கைப்பேசியில் 144x71.2x9.1mm நடவடிக்கைகள் மற்றும் வெள்ளை / ஆரஞ்சு, கருப்பு / நீலம் மற்றும் நீல வண்ண வகைகளில் வருகிறது.

இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போனில் ஓபரா மினி, OLX, ரீசார்ஸ் இட் நவ், கிளீன் மாஸ்டர், மற்றும் நியூஸ்ஹன்ட் போன்ற அப்ளிக்கேஷன்கள் ஏற்கனவே ஏற்றப்பட்டு வருகிறது. மேலும் இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

இன்டெக்ஸ் கிளவுட் M5 II ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:

  • டூயல் சிம்,
  • 480x854 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே,
  • 1ஜிபி ரேம்,
  • 1.2GHz குவாட் கோர் ஸ்ப்ரெட்ரம் (SC7731) ப்ராசசர்,
  • மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,
  • 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,
  • 1.3 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,
  • 3ஜி,
  • ஜிபிஆர்எஸ்/எட்ஜ்,
  • ஜிபிஎஸ்/எ-ஜிபிஎஸ்,
  • Wi-Fi 802.11 b/g/n,
  • FM ரேடியோ,
  • மைக்ரோ-யூஎஸ்பி,
  • ஜிஎஸ்எம்,
  • ப்ளூடூத்,
  • ஆண்ட்ராய்டு 4.4.2 கிட்கேட்,
  • 2000mAh பேட்டரி.

பழைய பதிவுகளை தேட