என் பொண்டாட்டி வாயி யப்பா

பாடகர் கிரிஷ், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்கும் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
புதுமுக இயக்குனர் தம்பி சைய்யது இப்ராஹிம் இயக்குகிறார். சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரெஹைய்னா இசை அமைக்கிறார், செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அதில் கிரிஷ் பேசியதாவது: சினிமாவில் நடிக்கும் ஆசையில்தான் அமெரிக்காவில் நடிப்பு கோர்ஸ் படிச்சேன். ஆனால் சூழ்நிலை பாடகனாக்கி விட்டது. பாடகனாகவே 9 வருடம் கடந்து விட்டேன். ஆனாலும் நடிப்பு முயற்சி என்னை நடிகனாக்கி விட்டது. கோ படத்தில் ஒரு பாட்டில் சின்ன ஷாட்டில் வருவேன். அந்த ஷாட்தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது. இப்ராஹிம் ராவுத்தர் அய்யா என் தந்தையை விட என் மீது அக்கறை கொண்டிருந்தார்.

படத்தை முடித்து பார்த்துவிட்டேன் ரொம்ப தரமான படமாக வந்திருக்கிறது. என் பொண்டாட்டி சங்கீதா (நடிகை) வாயிலிருந்து எப்போதும் நல்ல வார்த்தையே வராது. அவளே படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது. தப்பித்து விடுவீர்கள் என்று சொன்னாள். அவளே பாசிட்டிவாக சொல்வதால் படம் நல்ல வெற்றியை பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. என்றார் கிரிஷ்.

பழைய பதிவுகளை தேட