பாத வெடிப்பா பக்குவமா இருங்க

வெறும் கால்களில் நடந்து கொண்டேயிருப்பவர்களுக்கு பாதத்தில் பிளவு அதிகமாகி வலியை தரும். அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது.
ஆனால் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் பாதத்தில் வெடிப்பின்றி அழகாய் கவனித்துக் கொள்ள முடியும். 

கையளவு வேப்பிலையை எடுத்து அதனுடன் சுண்ணாம்பு சிறிது சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். ஓய்வு நேரத்தில் சூடா நீரில்
கால்களை 5 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுண்ணாம்பும் வேப்பிலையும் கலந்த பேஸ்ட்டை தடவவும். 20 நிமிடங்கள் கழித்து பாதத்தை ஸ்க்ரப் செய்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்தால் போதும். பாதம் மிருதுவாக வெடிப்பின்றி காணப்படும்.

நன்கு மசித்து வைத்த பப்பாளிப்பழத்தை குதிகால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து காய்ந்தவுடன் ஸ்க்ரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பிளவு ஏற்பட்ட பகுதியில் தோல்கள் ஒன்று சேர்ந்து புதிய தோல்கள் போல தோற்றமளிக்கும்.

தொடர்ந்து ஒருநாள் விட்டு ஒருநாள் கடுகு எண்ணெயை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் மசித்த வெந்தய கீரையில் கடுகு எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வாருங்கள். வெடிப்பு மறைந்து பாதங்கள் மிளிரும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget