நம்பிக்கை நாயகி காஜல்அகர்வால்

மாரி, பாயும்புலி படங்கள் தொடர்ந்து காஜல்அகர்வால், கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் நடித்து
வரும்போதே, அஜித்தின் 57வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதோடு, தெலுங்கில் சிரஞ்சீவியின் கைதி நம்பர் 150 படமும் கிடைத்தது. அதனால், மறுபடியும் காஜல்அகர்வாலின் மார்க்கெட்டில் பரபரப்பு கூடியது.

இந்நிலையில், இதே வேகத்தில் தான் இன்னும் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்து மேலும் மார்க்கெட்டை ஸ்டெடி பண்ணி விட வேண்டும் என்று நினைக்கிறார் காஜல்அகர்வால். அதன்காரணமாக, அனுஷ்கா, நயன்தாரா, திரிஷாவைத் தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கும் கதையின் நாயகியாக நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. தனது இந்த ஆசையை சில டைரக்டர்களிடம் வெளிப்படுத்தியுள்ள அவர், தான் அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுத்த சில வேற்று மொழிப்படங்களை டைரக்டர்களின் கவனத்துக்கு கொண்டு வந்து, தன்னாலும் கதையின் நாயகியாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறார் காஜல்அகர்வால்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்