காஷ்மீரில் பிறந்த அழகி அக்ஷா பட். கேரள மாநில சுற்றுலாத்துறை விளம்பர படங்களில் நடித்தவர் அப்படியே த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து
ஜோசப் கண்ணில் பட்டு அவரின் லைப் ஆஃப் ஜோசுட்டி படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு கன்னட படத்தில் நடித்தவர் கன்னட இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கண்ணில் பட்டு கன்னடம், தமிழில் உருவான ஒரு மெல்லிய கோடு படத்தில் நடித்தார். அதன் பிறகு மளமள வென தமிழ் பட வாய்ப்புகள் வரும் என்று நினைத்தார். ஆனால் மெல்லிய கோட்டின் தோல்வி அவரை அடையாளம் காட்டாமலேயே சென்று விட்டது.
தற்போது அவர் மீண்டும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ஹேப்பி வெண்டிங், பச்சக்களம் போன்ற படங்கள் சமீபத்தில் அவர் நடித்த படங்கள். மீண்டும் தமிழில் நடிக்க விரும்பும் அக்ஷா பட் தனது லேட்டஸ்ட் படங்களை இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கம் அனுப்பி வைக்கிறார். "நான் மார்டனாக வளர்ந்த பொண்ணு அதனால் கிளாமராக நடிப்பதில் தயக்கம் இல்லை. தமிழ் சினிமா மிகவும் பிடிக்கும். நல்ல கதைக்காகவும், கேரக்டருக்காவும் காத்திருக்கிறேன்" என்கிறார் அக்ஷா பட்.