இமேஜ் முக்கியமா பூர்ணா

ஜன்னல் ஓரம், தகராறு படங்களுக்குப்பிறகு தெலுங்கு படங்களில் நடித்து வந்த பூர்ணா, தற்போது தமிழில் மணல் கயிறு-2, சவரக்கத்தி, அம்மாயி
போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களில் வழக்கமான நாயகியாக இல்லாமல் பர்பாமென்ஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,
மணல்கயிறு-2 படத்தில் அழுத்தமான ரோலில் நடிக்கிறேன். மணல்கயிறு படத்தில் தனக்கு வரவேண்டிய மனைவி இந்த மாதிரி இருக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் பத்து கண்டிசன்களை போடுவார். அதேமாதிரி இந்த படத்தில் எனக்கு வரவேண்டிய கணவர் இந்தந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நான் கண்டிசன் போடுவேன். அதையடுத்து நடக்கும் பிரச்சினைகளும், குழப்பங்களும்தான் இந்த படம். தற்போதைய நவீன கால கணவன் மனைவி பிரச்சினைகள் அடிப்படையில் அப்படம் தயாராகியுள்ளது.

அதேபோல், சவரக்கத்தி படத்தில் ஐந்து, ஆறு வயசு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். அதோடு ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும். இந்த வேடத்தில் நடிப்பதற்கு பல நடிகைகள் மறுத்து விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் இந்த மாதிரியான வேடங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். அதோடு, நடிகைக்கு இமேஜ் தேவையில்லை என்று நினைப்பவள் நான். அந்த வகையில் இந்த படத்தில் நான் நடித்துள்ள வேடம் ரொம்ப யதார்த்தமான ஒரு குடும்பப் பெண்ணின் கதாபாத்திரம். அதனால் அதை உணர்ந்து நடித்துள் ளேன்.

அந்த வகையில், தற்போது நடித்து வரும் படங்களில் எனது திறமைக்கு நல்ல தீனி கிடைத்திருப்பதாக கருதுகிறேன். தொடர்ந்து சவால் விடக்கூடிய கதைகளில் நடித்து நல்ல பெயரெடுத்து நல்ல நடிகை என்ற இமேஜ் கிடைத்தால் போதும் என்பதே எனது விருப்பமாக உளளது என்று கூறும் பூர்ணா, நடிகைக்கு திறமை மட்டுமே போதாது. சரியான சந்தர்ப்பமும், சரியான வேடங்களும் கிடைக்க வேண்டும். அப்போதுதான் சினிமாவில் ஜொலிக்க முடியும் என்பதை எனது அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டேன் என்கிறார்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget